பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 145

சட்டை, பனியனுடன் வெளியே வந்த ஒருப் பேர்வழி, ‘யார் அது?’ என்றான், வியர்த்து விறுவிறுத்திருந்த நிலையிலே,

அந்த நிலையிலும் அவனை இனம் கண்டுக்கொண்ட ஆபத்சகாயம், ‘என்னடா வேணு, என்னைத் தெரிய வில்லையா உனக்கு?’ என்றார் ஓர் அசட்டுச் சிரிப்புடன்.

அதற்குள், “வேணுவா அவன் ஏன் வந்தான், இங்கே?” என்றுக் கேட்டுக்கொண்டேத் தனக்குப் பக்கமாக இருந்த கதவைத் திறந்துகொண்டுக் கீழே இறங்கினார் சுகானந்தம்.

அவரைப் பார்த்தானோ இல்லையோ, ஐயோ முதலாளி’ என்று கத்திக் கொண்டே அவன் எடுத்தான் ஒட்டம்

ஆபத்சகாயம் ஒன்றும் புரியாமல் கீழே இறங்கி, ‘அவன் ஏன் உங்களைக் கண்டதும் ஓடுகிறான்?’ என்றார் சுகானந்தத்தை நோக்கி.

‘அதுதானே எனக்கும் தெரியவில்லை?’ என்றார் அவர்

‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள், அவனும் உங்கள் டிரைவர்தானே?”

“ஆமாம். ஆனால், இப்போது அவன் இங்கே வேலையில் இல்லை’

‘நிறுத்திவிட்டீர்களா?” ‘வேறு வழி வரவர நடையுடை பாவனைகளில் அவனுக்கும் எனக்கும் வித்தியாசமே தெரியாமற் போய்விட்டது. எங்கேயாவது டீ, டின்னர் என்று போனால் முதலில் அவனைத்தான் வரவேற்கிறார்கள்; நான் இல்லை. இவர்தான் முதலாளி என்று அவன் சொன்ன பிறகே என்னை வரவேற்கிறார்கள்!”

‘இந்தக் கேலிக்கூத்து பொதுவாக எல்லாப் பெரிய மனிதர் வீடுகளிலும் இருக்கிறது”

கா.க -10