பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 147

‘டிரஸ்ஸிங் ரூமில் இருந்தாயா எங்கே, அந்தப் புது டிரைவர்?”

‘'வேலை ஒன்றுமில்லையே என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்’

“சமையற்காரன்?” ‘ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் மகளைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறான்’

‘இப்போது நீ இந்த வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாயா?”

“ஆமாம், அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?” ‘ஒன்றுமில்லை; என்னைக் கண்டதும் அவன் ஏன் ஒடவேண்டும்?”

‘கதவைத் தாளிட்டுக்கொண்டு அவன் ஏதாவது திருடிக்கொண்டு இருந்தானோ என்னமோ?”

அவள் திரும்பினாள்; அப்படியும் செய்வதுண்டு சில திருட்டுப்புயல்கள் நீங்களும் உள்ளேப் போய்ப் பாருங்கள்’ என்றார் ஆபத்சகாயம்.

‘'நான் மட்டுமென்ன? நீரும் வாரும் ஐயா, உள்ளே’ என்றார் சுகானந்தம்.

“நீயும் வாம்மா என்று ஆபத்சகாயம் தன் மகள் அருணர்வையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

‘சரிதான் நேற்று நீங்கள் என் செலவுக்காக ஐநூறு ரூபாய் கொடுக்கவில்லையா, அதை அடித்துக் கொண்டு போய் விட்டான் அவன்!” என்று சொல்லிக்கொண்டே, கீதா அவர்களுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றாள்.

‘'நான் நினைத்தது சரியாய்ப் போய்விட்டது; லேசில் விடக்கூடாது அவனை’ என்றார் ஆபத்சகாயம்.

‘விடாமல் என்ன செய்வதாம்?’ என்றாள் கீதா.

‘ஏன், போலீஸில் புகார் செய்வது!"