பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 காதலும்கல்யாணமும்

அவர்கள் சொல்லும் தார்மீக ஆன்மீக உபதேசங்கள் எல்லாம் இந்தச் சத்திய சீலர்களுக்கு முன்னால் செயலற்றுப் போன பிறகுதானே சட்டதிட்டங்கள் வந்திருக்கின்றன, இவர்களை மாற்ற? அவையும் வேண்டாமென்றால், தலைமுறைத் தலைமுறையாக இவர்களால் கசக்கிப் பிழியப்பட்டு வரும் மக்கள், நசுக்கி மிதிக்கப்பட்டு வரும் மக்கள் என்னதான் ஆவது?-கொடுமை, கொடுமையிலும் கொடுமை!

இவ்வாறு எண்ணி அவள் கொதித்துக் குமுறிக் கொண்டிருந்தபோது, ‘என்னம்மா, இங்கேயே நின்று விட்டாய்?’ என்றார் உள்ளே போன அவள் அப்பா, அவளைக் காணாமல் வெளியே வந்து.

‘'கால் கூசுகிறது அப்பா, உள்ளே வர’ என்றாள் அவள், முகத்தைச் சுளித்து.

‘மனம்தான் கூசும் என்று சொல்வார்கள்; உனக்குக் காலும் கூசுகிறதா?-நல்ல பெண்தான், போ! இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்து உனக்குப் பழக்கமில்லை! அதனால்தான் கூசுகிறது -வாழ்க்கை என்றால் இவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கை அம்மா, நாமெல்லாம் வாழ்வது ஒரு வாழ்க்கையா? வா உள்ளே; இன்னும் நீ இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!”

‘'வேண்டாம் அப்பா, தெரிந்து கொண்டவரை போதும்!”

“எதைத் தெரிந்துகொண்டாய், நீ?” ‘எஜமான் இல்லாத வேளையில் மாஜி டிரைவரை எப்படி உள்ளே வரவழைப்பது, வந்துவிட்டால் அவனை எப்படி வெளியே அனுப்புவது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன், அப்பா!’

‘விட்டுத் தள்ளு, அதை அவருக்குள்ள எத்தனையோ “ஸ்டெப்னிகளில் அது ஒன்று. அந்த ஸ்டெப்னி எக்கேடு கெட்டால் உனக்கு என்ன? நீ அவரைப் பார், அவர் காரைப்