பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 153

பார். அவருடைய பங்களாவைப் பார், அந்தப் பங்களாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அழகு படுத்தும் அகில உலக சித்திர விசித்திரங்களையெல்லாம் பார் அம்மா, பார்!”

“எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், அப்பா’ ‘அதிலிருந்து என்னத் தெரிகிறது, உனக்கு?” “பணத்திமிர்’ ‘ஐயோ பெண்ணே, அப்படியா நினைக்கிறாய் நீ2, வாழ்க்கை ஒரு கலை என்று சொல்கிறார்களே, அந்தக் கலையை நீ இங்கே பார்க்கவில்லையா?”

‘பார்த்தேன் அது கண்ணிர் விட்டுக்கொண்டிருக்கிறது, பாழும் பணம் தன்னையும் விலை கொடுத்து வாங்கி விடுகிறதே என்று’

‘ஆச்சரியமாயிருக்கிறது, என்னுடைய பெண்ணா இப்படிப் பேசுகிறாள் என்று எனக்கே ஆச்சரியமா யிருக்கிறது!”

இந்தச் சமயத்தில், ‘ஆச்சரியம் உங்களுக்கு மட்டு மல்ல; எனக்கும்தான் நீங்கள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள்; பழகப் பழக எல்லாம் சரியாய்ப் போகும் என்றார், அப்போதுதான் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த சுகானந்தம்.

அதற்குள் ஹாலிலிருந்த ரேடியோ கிராமைத் திருப்பிப் பாட வைத்துவிட்டு, ‘காபி தயார்’ என்றாள் கீதா.

எல்லோரும் உள்ளே சென்றனர்; அங்கிருந்த டீபாயின் மேல் இரண்டு கப் காபி மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

‘உங்களை விட்டுவிட்டா நாங்கள் காபி சாப்பிடுவது?” என்றார் ஆபத்சகாயம்.

‘'காபி உங்களுக்கும் எனக்கும் இல்லை; கீதாவுக்கும் அருணாவுக்கும்தான் நீங்கள் வாருங்கள், என்னுடன்’ என்று அவருடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சுகானந்தம்.