பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 காதலும் கல்யாணமும்

அதற்குள் அருணாவை அழைத்துக்கொண்டு கீதா உள்ளே வர, சுகானந்தம் ‘கை படாத ரோஜா'வைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, கை பட்ட ரோஜா'வை ஆபத்சகாயம் இருந்த பக்கமாகத் தள்ளிவிட்டார்.

‘ஐயோ, வேண்டாம். நான் அப்பாவுக்குப் பக்கத்தி லேயே உட்கார்ந்து கொள்கிறேன்!” என்று அலறினாள் அருணா.

அந்த ‘மிரண்ட மானைக் கண்டதும் கலெக்டர் உள்பட எல்லோரும் கலகலவென்று நகைத்தார்கள்

இதனால், தான் பெரிதும் அவமானத்துக்கு உள்ளாகி விட்டதாக நினைத்த ஆபத்சகாயம், “என்னப் பெண்ணம்மா நீ, ஓர் இழவும் தெரியாமல் வெள்ளைக்காரர்கள் எங்கேயாவது விருந்துக்குப் போனால் என்ன செய்கிறார்கள்? மரியாதைக்காக ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொண்டு உட்காரவில்லையா? அதே மாதிரிதான் இதுவும்! அது கூடத் தெரியவில்லையே, உனக்கு?’ என்றார் அவள் கையைப் பற்றி அவருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து.

‘இது என்னக் கருமம்! ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக்கொள்வது வேண்டுமானால் மரியாதையாயிருக்கட்டும்; அதற்காக இவர் மகளையா மாற்றி உட்கார வைப்பார் அதைப் பொருட்படுத்தாமல் சுகானந்தம் அவள் முதுகைத் தடவ, அது பிடிக்காமல் அவள் நெளிய, அந்த அபூர்வக் காட்சியை மேயரும் கலெக்டரும் கை தட்டி ரசித்தார்கள்.

அதற்குள் விளக்குகள் s# 6Y GTiL!, படம் ஆரம்பமாயிற்று- ஆகா! படமா, அது?

ஆம், படம்தான்! ஆனால் இளம் பெண்ணின் இச்சையைத் துரண்டி, அவர்களைப் பல வழிகளிலும் கெடுப்பதையேத் தங்கள் பொழுது போக்காகக் கொண்டி ருக்கும் சுகானந்தத்தைப் போன்றப் பெரிய மனிதர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படம் அது-அதாவது ஆண் பெண் உடல் உறவைப் பற்றியது; அதையும் ஆடையோடு