பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 159

எடுத்தால் எங்கே புரியாமற் போய்விடுமோ என்று ஆடையில்லாமலே எடுத்திருந்தார்கள்!

அந்த மேல் நாட்டுப் படம் இந்தக் கீழ்நாட்டு ரசிகர்களுக்கு எப்படிக் கிடைத்தது?-அருணாவுக்கு அது புரியவில்லை; அதைப் புரிந்துக் கொள்ள அவள் விரும்பவும் இல்லை-ஏனெனில், இருட்டு அந்தத் தியேட்டரை மட்டுமல்ல; தன் உள்ளத்தையும்-ஏன், இந்த உலகத்தையுமே ஆட்கொண்டிருப்பதாகத் தோன்றிற்று அவளுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள்; அந்த நிலையிலும் அவளுடைய மனக்கண் திறந்திருந்ததால் சுகானந்தம் அதற்குள் தன் நினைவை இழந்துவிட்டிருந்ததை அவள் உணர்ந்தாள். உணர்ந்து, மெல்ல எழுந்தாள்; எழுந்து, வெளியே நடந்தாள்-ஆம், தன் அப்பாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல்தான்!

ஏன் பார்க்க வேண்டும், அவரை விட இருளே தனக்கு உற்றத் துணையாயிருக்கும்போது?

23. அப்புறம் சொல்கிறேன்!??

ஆடி வரும் காற்று தன்னைத் தேடி வந்து, தன் மேலாக்கை இழுத்து விளையாட, மோகனுக்குப் பின்னால் அமர்ந்து, பாமா ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த போது, ‘என்ன இருந்தாலும் நீ இவ்வளவு சீக்கிரம் அருணாவைத் தெரிந்துகொண்டிருக்கக் கூடாது’ என்றான் அவன்.

‘தெரிந்துக் கொள்ளாமல் இருந்ததால்தானே அன்று நீங்கள் அவளைக் கண்டதும் ஒட்டம் பிடித்தீர்கள்?” என்றாள் அவள்.

‘உனக்குத் தெரியாது, பாமா! நாலு பேருக்குத் தெரிந்து காதலிப்பதைவிடத் தெரியாமல் காதலிப்பதில்தான் சுவை இருக்கிறது!"