பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காதலும்கல்யாணமும்

“இருக்கலாம்; ஆனால் உங்களை நான் காதலிப்பதோடு நின்று விடுவதாயில்லையே, கல்யாணமும் அல்லவா செய்து கொள்ள வேண்டுமென்று இருக்கிறேன்!” என்றாள் அவள், குத்தலாக,

‘அதனாலென்ன, இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் அவளை நானே உனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருப்பேனே?’ என்றான் அவன்.

“எங்கே அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள்? நீங்கள்தான் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நழுவிக்கொண்டு இருக்கிறீர்களே?” -

‘எல்லாம் உன்னுடைய நன்மைக்காகத்தான். அதிருக் கட்டும், வழக்கம் போல் இன்றும் உன்னை-நான் ரேடியோ நிலையத்துக்கு அருகே இறக்கி விட்டுவிட்டால் போதுமல்லவா?”

‘அதுதான் முடியாது; இன்று நீங்கள் எங்களுடைய வீட்டுக்குக் கட்டாயம் வரவேண்டுமாக்கும்?”

‘இன்று வேண்டாம் பாமா, இன்னொரு நாளைக்கு வருகிறேன்’ என்றான் அவன், கெஞ்சாத குறையாக,

“இன்னொரு நாளைக்கு, இன்னொரு நாளைக்கு என்று நீங்கள் இன்னும் எத்தனை நாட்கள்தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? உங்களால் என் மானம் போகிறது, அங்கே’

‘'அப்படியானால் φή! ‘’ என்றான் அவன், பெருமூச்சுடன்.

அதுதான் சமயமென்று, “ஆமாம், மணி அண்ணனைப் பற்றி நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் பொய்தானே?” என்றாள் அவள், அவனுடையத் தோள்களை மெல்லப்பற்றி. ‘சொன்னது பொய்தான்; ஆனால் அதைச் சொல்ல வைத்தது நீ’ என்றான் அவன்.

‘நான் என்றால்?"