பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 161

‘உன் அழகு என்று அர்த்தம்!”

இதைக் கேட்டுப் பெருமையால் பூரித்துப் போய்விட வில்லை பாமா, அட அசடே என்று தன் தலையில் தானே அடித்துக்கொண்டாள்.

அதைக் கவனிக்காத மோகன், ‘அதற்காக என்னை நீ வெறுக்கிறாயா, என்ன?” என்றான், அவள் பக்கம் திரும்பி.

அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்:

‘வெறுப்பதாயிருந்தால், இனி நீங்கள்தான் என்னை வெறுக்க வேண்டும்!”

அவன் சொன்னான்; சிரிக்காமலே சொன்னான்:

‘அழகில் மட்டுமல்ல; குணத்திலும் சிறந்தவளாயி ருக்கிறாய், நீ”

இதைக் கேட்டதும் பூரித்துப் போய்விடவில்லை பாமா: ‘ஐஸ் வைத்ததெல்லாம் போதும்; அக்கம் பக்கம் பார்த்து வண்டியை ஒட்டுங்கள்!’ என்றாள்.

‘ஏன், பயமாயிருக்கிறதா?’ என்று மோகன் கேட்டான். அவள் சிரித்தாள், ‘ஏன் சிரிக்கிறாய்?” என்றான் அவன்.

‘ஒன்றுமில்லை; உங்களைப் பார்த்து நான் கேட்க வேண்டியக் கேள்வியை என்னைப் பார்த்து நீங்கள் கேட்கிறீர்களே என்று சிரித்தேன்’ என்றாள் அவள்.

அன்று ம்ாலை ராதா வழக்கம்போல் விளக்கைப் பொருத்தி வணங்கிவிட்டுத் திரும்புவதற்கும், ஸ்கூட்டர் வந்து வாசலில் நிற்பதற்கும் சரியாயிருந்தது. ‘வந்து விட்டாள், சொன்னது சொன்னபடி அவரை அழைத்துக் கொண்டு வந்தே விட்டாள் என்று சொல்லிக்கொண்டே அவள் விரைந்து வந்தபோது, பாமாவுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மோகனைக் கண்டதும் திடுக்கிட்டாள்!

கா.க -11