பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 163

‘பாமா என்னால் துணிந்திருக்கிறாள் என்றால், நீங்கள் பாமாவால் துணிந்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் ஒரு பெண் அழைத்தாள் என்பதற்காக நீங்கள் அவளுக்குப் பின்னால் இவ்வளவு தூரம் வந்திருப்பீர்களா?”

‘அதைச் சொல்லுங்கள் முதலில்; இப்போதும் அவர் எனக்குப் பின்னால்தான் வந்தாரே தவிர முன்னால் வரவில்லைப் பாருங்கள்!’ என்றாள் பாமா.

எல்லோரும் சிரித்தார்கள்; அந்தச் சிரிப்பொலி காதில் விழுந்ததும், கொல்லைப் புறத்திலிருந்த ராதாவும் சிரித்தாள். ஆனால், ஏன் சிரித்தாள் என்று அவளுக்குத் தெரியாது; அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பமும் அவளுக்கு அப்போது எழவில்லை-தங்கை சிரித்தாள்; தானும் சிரித்தாள்-அந்த மகிழ்ச்சியே போதாதா, அவளுக்கு?

ஆனால்... அன்று என்னென்னவோ செய்து வைத்திருந்தேன்; அப்போது இந்தப் பிள்ளையாண்டான் வந்திருக்கக் கூடாதா? ஒன்றுமில்லாத இப்போது வந்து...

தனக்குத்தான் தோன்றும் இப்படியெல்லாம்; அவர்களுக்கு அப்படியொன்றும் தோன்றாது இப்போது. அவள் இருக்குமிடத்தில் அவருக்கு எல்லாம் இருப்பதாகத் தோன்றும்; அவர் இருக்குமிடத்தில் அவளுக்கும் எல்லாம் இருப்பதாகத் தோன்றும். இது இயற்கை...

ஆனால் ஒரு குறை தான் மட்டும் இல்லாமலிருந்தால் இந்தக் கல்யாணம் நிச்சயம் நடந்துவிடும்; இருப்பதால்தான் கொஞ்சம் சந்தேகமாயிருக்கிறது. அதற்குத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதா? என்ன செய்ய முடியும், செத்துப் போவதைத் தவிர?

சீச்சி, முதல் தடவையாக அந்தப் பிள்ளையாண்டான்

இங்கே வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படியா நினைப்பது?-மோசம், ரொம்ப மோசம்...