பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காதலும் கல்யாணமும்

ஆமாம், ஐயாவை இன்னம் காணோமே? அவரும் வந்து இந்தப் பிள்ளையாண்டானைப் பார்த்துவிட்டால் நல்லது; அதற்குப் பிறகு பேச வேண்டியதைப் பேசி...

என்ன அவசரம், தனக்கு? கல்யாணம் என்றால் அவ் வளவு சீக்கிரம் முடிந்துவிடுமா, என்ன?-ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லி, குறைந்த பட்சம் ஆறு மாத காலத் துக்காவது இழுத்துப் பறித்துக்கொண்டு நிற்கமாட்டார்களா?... நிற்கட்டும், நிற்கட்டும்-கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி!

இந்தத் தீர்மானத்துக்கு ராதா வந்தபோது, ‘அக்கா, அக்கா!’ என்று அவளை அழைத்துக்கொண்டே அங்கு வந்தாள் பாமா.

‘ஸ், கத்தாதே நான் இருப்பது அவருக்குத் தெரியக் கூடாது’ என்றாள் ராதா, தன் வாயைத் தானே பொத்திக் காட்டி.

“ஏனாம்?’ என்று கேட்டாள் பாமா. ‘அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன்; இப்போது நீ போ, அங்கே!’ என்றாள் அவள்.

‘வெறும் காபி கூட இல்லாமல் என்னை அங்கே போகச் சொல்கிறாய், நீ?” என்றாள் இவள்.

“அதை மறந்துவிட்டேனே நான் நீ இங்கேயே இரு; இதோ கலந்து எடுத்துக்கொண்டு வருகிறேன்’ என்று ராதா ஒடினாள்.

‘'நானும் வருகிறேனே!” என்று பாமா அவளைத் தொடர்ந்தாள்.

மோகனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டப் பிறகு, ‘அடுத்த முறை வரும் போது உங்கள் அப்பாவையும் அம்மாவையும் இங்கே அழைத்துக் கொண்டு வர முடியுமா?’ என்றாள் மீனாட்சியம்மாள்.