பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காதலும்கல்யாணமும்

‘அவளுக்கு உங்களைப் பார்க்க வெட்கமா யிருக்கிறதாம்; அதனால் ஒளிந்துகொண்டிருக்கிறாள்!” என்றாள் மீனாட்சியம்மாள் சிரித்துக் கொண்டே.

“சரி, இருக்கட்டும்; நான் வருகிறேன்!” என்று மோகன் எழுந்தான்.

அவனுக்குத் தன் கண்ணால் விடை கொடுத்து அனுப்பினாள் பாமா

24. ஆசை அலைகள்

மீனாட்சியம்மாளையும் சொக்கலிங்கனாரையும் முதல் தடவையாகப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த மோகனின் உள்ளத்தில் ஒரு புது நம்பிக்கை பிறந்தது. ஆம், அவனுடைய பழைய நம்பிக்கை சற்றே கலகலத்திருந்த சமயம் அது

அதாவது, என்று தன் கனவிலே வந்தக் கன்னி கேவலம் ஒரு சமையற்காரியின் தங்கை என்று அவனுக்குத் தெரிந்ததோ, அன்றே அவனுடைய நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது. ஆனால், அதை அவன் பாமாவிடம் சொல்லவில்லை; சொல்லி, அவள் காதலையும் கனவாக்கிவிட அவன் விரும்பவில்லை.

இந்த உலகத்தில் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது காதல்தான் என்பதை அவன் அறிந்தே இருந்தான். ஆயினும், எதைக் கடந்து நின்றாலும் தன் அப்பாவைக் கடந்து நிற்க முடியுமா, தன்னால்?-அதுதான் சந்தேகமாயிருந்தது அவனுக்கு.

இத்தனைக்கும் அன்றிருந்த கோழையல்ல அவன் இப்போது-வீரன்; பாமாவின் பண்பட்ட காதலால் நெஞ்சில் உரமும், நேர்மையில் திறனும் பெற்றுவிட்ட வீரன்! அந்த வீரத்தையும் மிஞ்சி நின்றது, கடமை என்ற ஒரு கட்டுப்பாடு.