பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 காதலும்கல்யாணமும்

போட, பல்லக்கு வேண்டியிருக்கிறது, வெளிச்சம் போட; பரிவாரமும் வேண்டியிருக்கிறது, வெளிச்சம் போட!

அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம்-அத்தனை வெளிச்சத்தோடு வந்து சொன்னால்தான், அவர்கள் சொல்வதை மக்கள் கடைப் பிடிக்காவிட்டாலும், காது கொடுத்தாவது கேட்கிறோம் என்கிறார்கள்

இதிலிருந்து என்னத் தெரிகிறது?-'உள்ளே இருட்டாயி ருந்தாலும் பரவாயில்லை; வெளியே வெளிச்சம் போடுங்கள் வெளிச்சம் போட்டு எங்களை மயக்குங்கள்; அதற்காகும் செலவை நாங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று மக்களே சொல்லாமல் சொல்கிறார்கள் என்றுத் தெரிய வில்லையா? அந்த வெளிச்சத்தைத்தான் அப்பாவும் விரும்புகிறார்; அந்த வெளிச்சத்தைக் கொண்டுதான், அவரும் தனக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மயக்குகிறார்:

இந்த நிலையில் தன்னுடைய காதல் நிறைவேற வேண்டுமானால், பாமா தனக்காக ஒரு பொய், ஒரே ஒரு பொய் அவசியம் சொல்லத்தான் வேண்டும்-அதாவது, தனக்கு அக்கா என்று ஒருத்தி இல்லவே இல்லை என்று அவள் அடித்துச் சொல்லிவிட வேண்டும்; அத்துடன், மீனாட்சியம்மாளும், சொக்கலிங்கனாரும்தான் தன்னுடைய தாயும், தந்தையும் என்று அவள் சாதித்துவிடவேண்டும். நல்ல வேளையாக, அவர்களும் அதை ஒப்புக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ன, அப்பா எதிர்பார்க்கும் பங்களா, கார், பட்டம், பதவி எல்லாம் மானம் மரியாதையை இழக்காமலே கிடைத்துவிடுகிறது அவருக்கு; பாமாவும் கிடைத்து விடுகிறாள் தனக்கு

ஆனால், அக்கா என்ற பாசத்தை விட்டு அந்தப் பொய்யை அவள் சொல்வாளா? அல்லது, அந்தப் பாசத்துக்காகக் காதல் என்ற நேசத்தையே அவள் கை கழுவிவிடுவாளா?-அதுதான் புரியவில்லை அவனுக்கு.