பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 காதலும்கல்யாணமும்

‘நல்லப் பெண்தான், போ நீங்கள் இருக்கும்போது அவர் எனக்குப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன? ‘

“இதிலிருந்தே தெரிகிறதே, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டுதான் இத்தனை நாட்களாக நீ இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று’

‘அதற்கு என்ன, இப்போது?’ ‘ஒன்றுமில்லை; உனக்கு அப்பா எப்படியோ, அது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை அவர் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை’

‘இப்படி ஒரு பெண் சொல்ல இன்றுதான் கேட்கிறேன், நான்’

‘இப்படி ஒரு அப்பா இருக்க இன்றுதான் பார்க்கிறேன். நான்’

‘நல்ல வேடிக்கைதான், போ அவர் அப்படி என்ன செய்தார் உன்னை?”

‘அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? அவர் ஒரு கிழட்டுப் பயலை என்னுடன் விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கிறார், அம்மா!’

‘அந்தக் கிழட்டுக் குரங்கு கொஞ்சம் பசையுள்ள குரங்காயிருந்திருக்கும்!”

“ஆமாம் அம்மா, அது கொஞ்சம் பசையுள்ளக் குரங்குதான்’

‘இப்போது அவர் அங்கேதான் இருக்கிறாரா?’ “ஆமாம்; அந்தக் கிழட்டுக் குரங்குடன் அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்துக் கொண்டு “ஞானஸ்நானம் செய்துக் கொண்டிருக்கிறார்!”

அவ்வளவுதான்; ‘'அடப் பாவி, மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா, அதை?’ என்று தன்னை மறந்துக் கத்திவிட்டாள் அன்னபூரணி.