பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காதலும்கல்யாணமும்

‘ழைட்டோ’ என்றார் இவர், அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல்; அதைப் புரிந்துகொண்டு, ‘ழைட்டோ!’ என்றார் அவரும், காரைக் கிளப்பிக்கொண்டே.

அதற்குள் என்ன நினைத்தாரோ என்னமோ, “ஒய், ஒய்! எதை முக்கியமாகக் கேட்க வேண்டுமோ, அதை மறந்து விட்டேனே, நான்? உம்முடைய மகள் வீட்டுக்கு வந்து விட்டாளா என்றுக் கேளும்’ என்றார் அவர், கிளப்பியக் காரை நிறுத்தி.

‘வராமல் எங்கே போயிருக்கப் போகிறாள்? நீங்கள் போய் வாருங்கள் என்றார் இவர்.

‘நீர் கேட்டுத்தான் பாருமே?’ என்றார் ஆவர். ‘எழ்ன கவலை. எழ்ன கவலை எனக்கில்லாத கவலையல்லவா உங்களுக்கு இழுக்கிறது?’ என்று குழறி வழிந்து கொண்டே இவர் திரும்பி, ‘அழ்னபூழ்ணி, அழ்னபூழ்ணி!’ என்றார், உள்ளே தலையை நீட்டி.

‘என்னவாம், அழ்னபூழ்ணரிக்கு ‘ என்றாள் அவள் எரிச்சலுடன்,

‘அழுணா வழ்ந்துட்டாளா?” ‘எழ்ல்லாம் வழ்ந்துட்டாள்!” ‘வழ்ந்துட்டாளா, கொழ்ஞ்சங்கூட மழியாதை தெழியாத கழுதை’ என்று சொல்லிக்கொண்டே, இவர் மறுபடியும் திரும்பி, ‘வழ்ந்துட்டாளாம், வழ்ந்துட்டாளாம்!” என்றார் ஒரு முறைக்கு இரு முறையாக,

‘ரொழ்ம்ப சழ்ந்தோழம்; டாழ்டா!’ என்று அவரும் குழறி வழிந்துகொண்டே கையை ஆட்டிவிட்டுச் செல்ல, ‘டாழ்டா!’ என்று இவரும் கையை ஆட்டிவிட்டு உள்ளே வந்தார்.

‘யார் அந்தப் புண்ணியாத்மா? அவர்தான் உங்களுக்கு இந்த ஞானஸ்நானத்தைச் செய்துவைத்திருப்பவரா?” என்று கேட்டாள் அன்னபூரணி.