பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 177

‘அவர்தாண்டி, சுகானந்தம்! இன்று மட்டுமா அவர் எனக்கு “ஞானஸ்நானம் செய்துவைத்திருக்கிறார்? இதற்கு முன்னால் எத்தனையோ தடவை செய்து வைத்திருக்கிறாரேடி! அப்போதெல்லாம் கேட்காத நீ...’

‘அப்போது உங்களையும் என்னையும் தவிர இந்த வீட்டில் வேறு யாரும் இல்லை; கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்று பேசாமல் இருந்தேன். இப்போது வயதுக்கு வந்தப் பிள்ளையும் பெண்ணும் வீட்டில் இருக்கும்போது...’ -

‘இருந்தால் என்னடி அவர்களைக் கட்டிக்கொண்டு நீ அழு; உன்னைக் கட்டிக்கொண்டு அவர்கள் அழட்டும்! எனக்கு வேண்டாம், இந்த வாழ்க்கை; எனக்கு வேண்டாம், இந்த வீடு வாசலைத் தாண்டினால் வீதியில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும்-இது நம் வீடு ஒரு நாளைப்போல எந்த விதமான மாறுதலும் இல்லாமல் பொழுது விடிந்தால் காபி, மத்தியானம் சாப்பாடு; சாயந்திரம் சிற்றுண்டி; இரவு சாப்பாடு; அப்புறம் தூக்கம்-இது நம் வாழ்க்கை சீ. இதுவும் ஒரு வாழ்க்கையா? இதுவும் ஒரு வீடா?-போய்ப் பார்: சுகானந்தத்தின் வீட்டை போய்ப்பார், சுகானந்தத்தின் வாழ்க்கையை எவ்வளவுப் பெரிய இடம், என்ன ரம்மியமான வாழ்க்கை பொழுது போனால் ஊரில் இருக்கிற பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கேதாண்டித் கூடுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் அங்கே என்ன உபசாரம் நடக்கிறது, என்ன உபசாரம் நடக்கிறது! அந்தப் பெரிய மனிதர்களோடு பெரிய மனிதர்களாக நாமும் கொஞ்ச நேரமாவது இருந்து விட்டு வருவோமே என்று நான் இவளை அழைத்துக்கொண்டு அங்கே போனால், இவள் சொல்லாமல் கொள்ளாமலா ஒடி வருவது? எங்கே அவள்” என்று அருணாவின் அறையை நோக்கி அவர் பாய்ந்ததுதான் தாமதம், அவள் கதவுகள் இரண்டையும் ஏககாலத்தில் அடித்துச் சாத்தி, உள்ளே டக் கென்று தாளிட்டுக் கொண்டுவிட்டாள்