பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. நாலும் தெரிந்த நாற்பத்தெட்டு!

என்ன காரியம் செய்துவிட்டாயடி?’ -அலறினாள் அன்னபூரணி, மூடிய கதவின்மேல் மோதிக் கொண்டு விழுந்து, பேச்சுமில்லாமல் மூச்சுமில்லாமல் கிடந்த தன் கணவரைப் பார்த்து.

‘நான் என்னம்மா, செய்தேன்? -ஒன்றும் புரியாமல் கதவைத் திறந்தாள் அருணா.

இந்தக் கலவரத்தில் விழித்துக்கொண்ட மோகன் எழுந்து வெளியே வந்து, ‘என்னம்மா, அப்பாவுக்கு என்ன?” என்றான் பதட்டத்துடன்,

‘ஒன்றுமில்லை; பெரிய மனிதர்களோடு பெரிய மனிதராக இவரும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்திருக்கிறார் அல்லவா? அதன் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்’ என்றாள் அருணா,பேச்சு நின்றாலும் மூச்சு நிற்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு! அதற்குள் சீமைச் சாராயத்தின் நெடி மூக்கைத் துளைக்கவே, இந்தப் பழக்கம் வேறு உண்டா, இவருக்கு?” என்று சொல்லிக்கொண்டே கைக்குட்டையைத் தேடினான் மோகன், அந்த நெடியிலிருந்து, ஓரளவாவது தப்ப!

‘எவ்வளவோ சொன்னேன், இதெல்லாம் உங்களோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரியவேண்டாமென்று -கேட்டாரா? இப்போது பார், இவர் பெற்றக் குழந்தைகளே இவர் மேல் காரித் துப்புகின்றன என்று தனக்குள் எண்ணிப் பொருமிய அன்னபூரணி, ‘இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லையே, எனக்கு என்று கையைப் பிசைந்தாள். ‘யாருக்குத் தெரியும், அந்தச் சுகானந்தத்துக்குத்தான் தெரியும்’ என்றாள் அருணா, வீட்டின் முகட்டை நோக்கி.

“வேடிக்கைக்கும் விளையாட்டுக்கும் இதுவா நேரம்? நீங்கள் இவரைத் தூக்கிக்கொண்டுப் போய்க் கட்டிலின் மேல்