பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காதலும் கல்யாணமும்

‘இவருடைய விஷயத்திலும் அந்த அதிசயம் சொல்வதுதான் சரியாயிருக்க வேண்டும். நீ இவருடைய காலைப் பிடி; தூக்கிக்கொண்டு போய்க் கட்டிலில் கிடத்திவிடுவோம்’ என்றான் மோகன், தன் அப்பாவின் தலைக்கு கீழே கையைக் கொடுத்தபடி,

‘அவனுக்கும் இந்தப் பழக்கம் உண்டா, என்ன? ‘ என்றாள் அன்னபூரணி, வியப்புடன்.

‘இல்லை, இந்தப் பழக்கம் உள்ளவர்களில் பலரை அவன் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறான்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் தன்னால் முடிந்தவரை அவன் செய்திருக்கிறான்’ என்றான் மோகன்.

அதற்குள் அருணா குனிந்து ஆபத்சகாயத்தின் கால்களைப் பற்ற, குப்பென்று வீசிய சாராய நெடி அவளுக்குக் குமட்டலை உண்டாக்க, ‘உனக்கு வேண்டாம் அந்த வேலை, நீ இப்படி வா’ என்று அவள் தாயார் அவளை இழுத்து அப்பால் விட்டு விட்டுத் தானே அவருடைய காலைப் பிடிக்க, இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் அவரைக் கட்டிலின் மேல் கிடத்தினார்கள்.

மறுநாள் காலை மணி சொன்னது உண்மையாயிற்று: எப்பொழுதும் போல் ஆபத்சகாயம் எழுந்து உட்கார்ந்தார். தலையை லேசாக வலிப்பது போலிருந்தது; இரவு குடித்ததன் எதிரொலி இது’ என்பதை அனுபவப்பூர்வமாகப் புரிந்து கொண்ட அவர், இப்பொழுது கொஞ்சம் விஸ்கி இருந்தால் இந்தத் தலைவலி இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்; இந்தக் காலை நேரமும் எப்பொழுதும்போல் அழுது வடியும் நேரமாயில்லாமல் இனிய நேரமாகிவிடும்!-எங்கே போவது விஸ்கிக்கு? பதவியில் இருந்தபோது வேண்டுமானால் எத்தனை புட்டி தேவையாயிருந்தாலும் ஒசியிலேயே கிடைக்கும்; இப்பொழுதுதான் எவனும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறானே எப்பொழுதாவது தன்னைத் தேடிக்கொண்டு வரும் ஓரிரு திருட்டுப் பயல்கள் கூட