பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 181

விஸ்கியும் பிராந்தியுமா திருடிக்கொண்டு வருகிறார்கள்? வேறு என்னவெல்லாமோ திருடிக் கொண்டு வருகிறார்கள்! அவற்றால் ஓரளவு பணம்தான் கிடைக்கிறது? இதற்காகச் சுகானந்தத்தைத் தேடிக் கொண்டு செல்வதென்பதும் இப்போது முடியாத காரியம்; அப்படியே தேடிக்கொண்டுச் சென்றாலும் அவர் கிடைக்கமாட்டார்; கிடைத்தாலும் நேற்று வாய்த்த அந்த ‘மாலை நேரம் இன்று வாய்த்து விடாது-என்னக் கஷ்டம், என்னக் கஷ்டம் இப்படியும் ஒரு பிறவி இருக்க வேண்டுமா, இந்த உலகத்தில்? பிறந்தால் சுகானந்தத்தைப் போல் பிறக்கவேண்டும்; வாழ்ந்தால் சுகானந்தத்தைப் போல் வாழ வேண்டும். இல்லாவிட்டால்...’

இந்த இடத்தில் அவர் தன் இதய வேட்கையைச் சற்றே நிறுத்தி, எண்ணத்திலாவது ஒரு முறை செத்து வைக்கலாமே என்று துணிந்தபோது, காபியும் கையுமாக வந்து நின்றாள் அன்னபூரணி.

‘'காபி, காபி, காபி-வேறு என்ன கிடைக்கிறது இந்த வீட்டில், குடிப்பதற்கு?’ என்றார் அவர் சலிப்புடன்.

“டீ போட்டுக் கொண்டு வரட்டுமா?” என்றாள் அவள், அவருடைய வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக்கொள்ளும் நோக்கத்துடன்.

‘உன்னுடைய காபியையும் டீயையும் கொண்டுபோய் உடைப்பிலே போடு போ, எனக்கு எதிரில் நிற்காதே, போ!’ என்று எரிந்துவிழுந்தார் அவர்.

“எங்கே போவதாம்’ என்று பரிந்து கேட்டாள் அவள்.

“எங்கேயாவது தொலைந்து போ!’

‘போகாவிட்டால்?”

‘கொன்றுவிடுவேன், கொன்று’

‘அந்த வார்த்தைதான் நானும் உங்களிடம் கேட்கவேண்டுமென்று இருந்தேன்; அதை நான் கேட்காமலே நீங்கள் கொடுக்க முன் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி