பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 காதலும் கல்யாணமும்

என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த காபியை டீபாயின் மேல் வைத்துவிட்டுத் தன் கழுத்தை அவருக்கு முன்னால் நீட்டினாள் அவள்!

அதற்கு மேல் தன்னுடையக் கோபத்தை எப்படிக் காட்டுவதென்று தெரியவில்லை அவருக்கு: “இதில் என்ன குறைச்சல், இந்த நாட்டுப் பெண்களுக்கு’ என்றுக் கருவிக்கொண்டே எழுந்து வெளியே வந்தார்.

கூடத்தில் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த அருணா, அவரைக் கண்டதும் தன் கையிலிருந்தப் புத்தகத்தை மூடிக் கீழே வைத்துவிட்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்

“எங்கேப் போகிறாய்?'-அதட்டினார் ஆபத்சகாயம். அவள் அஞ்சவில்லை; ‘'நான் எங்கே போகிறேன்?” என்றாள், அவரை நோக்கித் திரும்பாமலே.

“எங்கேயும் போகாததற்கு அப்படித் திரும்பிக் கொண்டிருப்பானேன்?”

‘'வெட்கப்படுகிறேன், உங்களைப் பார்க்க! வேதனைப்படுகிறேன், அதை உங்களிடம் சொல்ல!”

‘இருக்காதா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்தால் ‘

‘அதற்காக நான் வெட்கப்படவில்லை...’ ‘வேறு எதற்காக வெட்கப்படுகிறாயாம்?” ‘இப்படியும் ஒர் அப்பா வந்து வாய்த்திருக்கிறாரே என்பதற்காக’

இதைச் சொல்லி அவள் வாய் மூடவில்லை; “என்னச் சொன்னாய்’ என்று உறுமினார் அவர்.

மோகன் குறுக்கிட்டு, ‘அவளுடன் உங்களுக்கு என்னப்பா, பேச்சு? நீங்கள் போய்க் காபியைக் குடியுங்கள்!” என்றான். அவரைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.