பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 185

அப்படிக் குடிக்கிறோமாக்கும்? நேற்றிரவு மட்டும் அவர் தன் சிநேகிதர்களுக்காக எவ்வளவு செலவழித்திருப்பார், தெரியுமா? ரூபாய் ஆயிரத்துக்கு மேல் இருக்கும்டி, ரூபாய் ஆயிரத்துக்குமேல் இருக்கும்1-ஆஹா அவருடன் மட்டும் நாம் சம்பந்தம் செய்து கொண்டு விட்டால்?-கவர்னர் வந்து என்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குவார்; கவர்னரின் மனைவி வந்து உன்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குவாள். அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? குறைந்த பட்சம் ஒரு மந்திரியின் மகளையாவது பார்த்து இவனுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம்; அந்த மந்திரியின் தயவைக் கொண்டு எதற்காவது பெர்மிட், லைசென்ஸ், கோட்டா என்று வாங்கி, லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்கலாம்...’

அவர் முடிக்கவில்லை; அதற்குள், ‘அம்மா இல்லையா என்று யாரோ வந்து கேட்கவே, நடுவில் தன்னை மறந்து மூடிக்கொண்ட கண்களை அவர் திறந்தார். அடுத்த வீட்டுக்காரி வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் அடக்கமே உருவாய் நின்று கொண்டிருந்தாள்

அப்போதுதான் அவளைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை என்பதும், எல்லோரும் தன்னுடையப் போக்கில் தன்னைப் பேச விட்டுவிட்டு, அவரவர் வேலையை அவரவர் பார்க்கப் போய்விட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்தது.அதற்குமேல் சும்மா இருக்க முடியுமா, அவரால்? ‘அன்னபூரணி, அன்னபூரணி என்றார் ஆத்திரத்துடன்.

‘கொஞ்சம் பொறுங்கள்; சோற்றை வடித்துவிட்டு வந்துவிடுகிறேன்!” என்றாள் அவள், அடுக்களையிலிருந்து. ‘'அதோ இருக்கிறாள்; போய்ப்பார்’ என்று அடுத்த வீட்டுக்காரியிடம் மட்டும் தன் ஆத்திரத்தைக் காட்டாமல் சொல்லிவிட்டு, “எங்கே, அந்த அருணா என்று உறுமினார் அவர்.