பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 காதலும கல்யாணமும்

அப்போதும் அடுக்களையை விட்டு வெளியே வராமல், ‘கல்லூரிக்கு நேரமாகவில்லையா, குளிக்கப் போயிருக்கிறாள்’ என்றாள் அன்னபூரணி.

‘மோகன்: ‘

‘அவனுக்கும் ஆபீசுக்கு நேரமாகிவிட்டதாம்; முடி வெட்டிக் கொண்டு வரப் போயிருக்கிறான்’

அவ்வளவுதான்; அதற்குமேல் அவளை ஒன்றும் கேட்க விரும்பாமல், “மரியாதைத் தெரியாத கழுதைகள், மரியாதைத் தெரியாத கழுதைகள்’ என்ற பல்லவியைத் தொடர்ந்துப் பாடிக்கொண்டே, ஆறிப்போன காபியை எடுத்துக் குடித்தார் அவர், ஓர் ஆறுதலுக்காக

27. அன்பின் துன்பம்

L1Tமா கேவலம் ஒரு சமையற்காரியின் தங்கை1-இது தன் அப்பாவுக்குத் தெரியக்கூடாது என்று மோகன் மட்டும் நினைக்கவில்லை; ராதாவும் நினைத்தாள்

இந்த நினைப்பு மோகனைப் பார்த்த பிறகு அவளுக்கு ஏற்படவில்லை; பார்ப்பதற்கு முன்னாலேயே ஏற்பட்டிருந்தது -ஆம், பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றாயிருந்தாலும், சிறப்பு எல்லா உயிர்க்கும் ஒன்றாயிருக்க முடியாது, செய்யும் தொழிலால்’ என்பது, குறளைப்பற்றியும் குறள் ஆசிரியரைப் பற்றியும் தெரியாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. அத்துடன், பாம்புக்கு விஷத்தை ஏற்றத்தான் தெரியும்; இறக்கத் தெரியாது-அதே மாதிரி சமூகத்துக்கும் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கத்தான் தெரியும்; குறைக்கத் தெரியாது, குறைக்க விரும்பாது என்பதையும் அவள் அறிந்திருந்தாள். ஆகவே, தனக்குத் தெரிந்த தொழிலைச் செய்து வாழ அவள் தயங்கவில்லை; அந்தத் தொழிலில் இழிவு ஏதும் இருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை. மாறாக,