பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 காதலும்கல்யாணமும்

பிரயோசனம்?-அதனால் தான் அது யாருக்கும் தெரியக் கூடாது, முக்கியமாகப் பாமாவின் காதலனுக்கு அது தெரியக் கூடாது என்று அவள் இப்போது நினைத்தாள். அவள் நினைத்ததற்கு நேர் விரோதமாக மோகன் வந்து சேர்ந்தான்-ஆம், அவனுக்குத் தெரியும் அவள் சமையற்காரி என்று-பாமா சொல்லி அல்ல; சொல்லாமலே தெரியும் அவள் சமையற்காரி என்று அவனுக்கு அதை மறைப்பதற்காக ஒரு இரண்டு நாள் வேண்டுமானால் அவள் அவனைக் கண்டதும் ஒளிந்துக்கொண்டு விடலாம்; கடைசிவரை அப்படியே ஒளிந்துகொண்டிருக்க முடியுமா?அதுதான் யோசனையாயிருந்தது அவளுக்கு.

அந்த யோசனையிலேயே அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அவள் அப்படியும் இப்படியுமாகப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தபோது, “அக்கா, அக்கா அப்புறம் சொல்கிறேன் என்றாயே?’ என்று ஆரம்பித்தாள் அவளுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த பாமா. அவளுக்கும் தூக்கம் பிடிக்காமல்தான் இருந்தது அப்போது

‘நீயும் அந்த மோகனும் இந்த நாளில்தான் காதலிக்கிறீர்கள் என்பதில்லை; அந்த நாளிலும் காதலித்தீர்கள்’

‘எந்த நாளில், அக்கா?”

‘அதாவது நீ நாலைந்து வயது சிறுமியாயிருந்த அந்த நாளில் அப்போது அவனுக்கும் வயது ஏழெட்டுத்தான் இருக்கும். எப்போது பார்த்தாலும் அவன் உன்னுடன் விளையாட வந்துவிடுவான்’

‘நம்முடைய வீட்டுக்கா?”

‘இல்லை; அவன் ஏன் நம்முடைய வீட்டுக்கு வரப் போகிறான்) நாம்தான் அவனுடைய வீட்டுக்குப் போவோம்!”

“அங்கேயும் நீ வேலையாயிருந்தாயா, என்ன?”