பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 காதலும் கல்யாணமும்

நீக்கிவிட்டார்! அதற்காக நான் அன்றும் வருந்தவில்லை; இன்றும் வருந்தவில்லை. ஏனெனில், அதற்கு உடந்தை யாயிருந்தபோது அடைந்த மகிழ்ச்சியை வேறு எப்போதும் நான் அடைந்ததில்லை; அடையப்போவதுமில்லை’

இதைச் சொல்லி அவள் நிறுத்தியதும், ‘அப்படிப் பட்டவருடன் நீ எனக்காகச் சம்பந்தம் செய்துகொள்ள முடியுமா, இப்போது?’ என்றாள் பாமா.

‘'நான் அவருடன் சம்பந்தம் செய்து கொள்ள தயாராயிருந்தாலும், அவர் என்னுடன் சம்பந்தம் செய்து கொள்ளத் தயாராயிருக்கமாட்டாரே? அதனால்தான் அந்தப் பிள்ளையாண்டான்ைக் கண்டதும் நான் ஒளிந்துகொண்டு விட்டேன். அதனாலென்ன, நீ அவனிடம் என் அக்கா சமையற்காரி என்று இதுவரை சொல்லவில்லையே என்றாள் ராதா, ஏதோ ஒர் அசட்டு நம்பிக்கையுடன்,

‘சொல்லாவிட்டால் ‘

‘ஐயா, அம்மாவைக் கொண்டே உன்னுடைய கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன், நான்!”

‘நீ இல்லாமலா எனக்குக் கல்யாணம்?”

‘'நான் இல்லாமலென்ன, நாலு பேரில் ஒருத்தியாக நானும் இருந்துவிட்டுப் போகிறேன்’

‘அப்படி நடக்கும் கல்யாணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நீ நினைக்கிறாயா?”

‘நான் அப்படி நினைக்கவில்லை; ஒரிரு நாட்களுக்கு ஏதோ ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். அதற்காக என்னுடைய அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் நான் ஒரு சமையற் காரனைப் பார்த்தா உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது?”

‘'வேண்டாமே கல்யாணம் இல்லாமல் என்ன குறைந்து போய்விட்டாய் நீ? அதே மாதிரி நானும் இருந்துவிட்டுப் போகிறேன்!”