பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 191

‘ரொம்ப அழகுதான்! அப்படி நீ இருந்துவிட்டால் இது வரை நான் வாழ்ந்ததற்கே அர்த்தமில்லாமல் அல்லவா போய்விடும்?”

‘அதற்காக உன்னை நான் உயிரோடு மறந்துவிட வேண்டுமா, என்ன? அது என்னால் முடியாது’

‘அபசகுனம் மாதிரிப் பேசாதே அந்தப் பையனைப் போல் இன்னொரு பையன் உனக்குக் கிடைக்க மாட்டான்’ “இருக்கலாம்; ஆனால் உன்னைப் போல் இன்னொரு அக்காவும் எனக்குக் கிடைக்க மாட்டாளே?”

‘'கிடைக்காமல் எங்கே போய்விடப் போகிறாள்? நீ போய்த் தூங்கு!’

‘தூங்கவாவது!-எவ்வளவு பெரிய துரோகத்தை எவ்வளவு சாதாரணமாகச் செய்யச் சொல்லிவிட்டு இவள் என்னைத் தூங்கச் சொல்கிறாள்!-நடக்கிற காரியமா, இது?

இவளுக்காக அவரை நான் மறந்தாலும் மறப்பேனே தவிர, அவருக்காக இவளை நான் மறப்பதாவது?

அதிலும், இவள் நினைப்பதுபோல இதுவரை நான் இவளைப்பற்றி அவரிடம் சொல்லாமலும் இல்லையே?ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறேன், ‘என் அக்கா சமையற்காரிதான் என்று அதற்கு ஒப்பி அவர் என்னை மணந்தால் மணக்கட்டும்; மணக்காவிட்டால் போகட்டும்!

அதற்காக எந்த ஏணியைக் கொண்டு இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறேனோ, அந்த ஏணியையா, இப்போது நான் காலால் உதைத்துத் தள்ளுவது?-சீ, நினைப்பதற்கே நெஞ்சம் கூசுகிறதே!

காதலுக்காகப் பெற்ற தாயையும், பேணிக் காத்த தந்தையையும் கூடச் சிலர் துறந்துவிடுகிறார்கள் என்பது என்னமோ உண்மைதான்!ஆனால் அந்தக் காதலில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு இருந்தால் அத்தனைத் தன்னலம் அதில் இடம் பெற்றிருக்குமா?