பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 காதலும் கல்யாணமும்

உண்மையில், காதல் என்பதுதான் என்ன?-தன்னலம் பேணி, பிறர் நலம் துறப்பதா காதல்?-இல்லை, பிறர் நலம் பேணித் தன்னலம் துறப்பதே காதல்

அந்தக் காதல்தான் எனக்கும் தேவை, இந்த உலகத்துக்கும் தேவை. மற்ற காதல்களெல்லாம் யாரை வாழ வைக்க வேண்டுமோ, அவர்களை வாழ வைக்கட்டும்; என்னை வாழ வைக்க வேண்டாம். ஏனெனில் பெற்ற தாயைவிட, பேணிக் காத்த தந்தையை விட என் அக்காவே எனக்குப் பெரியவள்!-ஆம், அவள் எனக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்திருந்தால் கூட நான் அவளை அவ்வளவு பெரியவளாக மதித்திருக்க மாட்டேன்; அவள் தியாகம் செய்தது, செய்துக் கொண்டிருப்பது தன் உணர்ச்சியை யாருக்காக, எனக்காக அந்த மகா தியாகத்தை மறந்து நான் வாழ்வதை விட, சாவதே மேல்...

இந்த ‘ஆத்ம சோதனை'யில் அன்றிரவை எப்படியோ கழித்து விட்டு, மறுநாள் காலை அவள் ஆபீசுக்குப் போன போது, அங்கே மோகன் இடம் காலியாயிருந்தது. எங்கே போயிருப்பார்?’ என்று அவள் கற்றுமுற்றும் பார்த்தபோது, ‘இன்த மோகன் உங்களிடம் கொடுக்கச் சொன்னான்’ என்று ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான் மணி.

அந்தக் கடிதத்தில்:

‘அன்புள்ள பாமா,

இன்று நீ என்னை ஆபீசில் காணாமல் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்; அந்த ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காகவே இந்தக் கடிதம்-அத்துடன், எங்கே நீ என் வீட்டைத் தேடி வந்துவிடுவாயோ என்ற அச்சமும் கூட!

நேற்றிரவு உன்னை உன் வீட்டில் வைத்துப் பார்த்து விட்டு வந்ததிலிருந்து என் வீட்டில் எனக்கு அமைதியில்லை. அதற்கு எத்தனையோக் காரணங்கள் இருப்பினும் அவற்றை யெல்லாம் இப்போது நான் இங்கே சொல்ல விரும்ப