பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 193

வில்லை. மொத்தத்தில் தற்போது சாந்தி இழந்து தவிக்கும் நான் ஓரளவாவது சாந்தி பெறவேண்டும் என்பதற்காக மணியின் அறையைத் தேடி வந்தேன். அவனும் தன் அறையிலேயே என்னை இருக்கச் சொல்லிவிட்டு ஆபீசுக்கு வந்து விட்டான். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்த்தான் போயிற்று; கதவை உள்ளேத் தாளிட்டுக்கொண்டுக் கண்ணை மூடிப் படுத்துக்கொண்டு விட்டேன்

தனிமை அதிலும் ஓர் இனிமை இருக்கத்தான் இருக்கிறது. ஒரு வேளை அதற்காகத்தான் அவன் என்னை இங்கே விட்டுவிட்டு அங்கே வந்துவிட்டானோ என்னமோ?இருந்தாலும் இருக்கும்; நீண்ட நாட்களாகவே தனிமையில் இனிமை கண்டு கொண்டிருப்பவன் அல்லவா அவன்?

நீ விரும்பினால் சாயந்திரம் அவனுடன் ஒட்டல் அறைக்கு வரலாம்; விரும்பாவிட்டால் வேண்டாம். நாளை நானே வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்; மற்றவை நேரில்.

என்றும் உன்னுடைய,

3 *

மோகன்,

குறிப்பு: படித்து முடித்ததும் இந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்து விடு; பத்திரப்படுத்தி வைக்காதே. அதனால் உனக்கும் எனக்கும் பின்னால் ஏதாவதுத் தொல்லைகள் நேர்ந்தாலும் நேரலாம்! அவனுடைய குறிப்புப்படி அவள் அந்தக் கடிதத்தைப் படித்துமுடித்ததும் கிழித்து எறிந்துவிடவில்லை; அதற்கு எந்தவிதமான அவசியமும் இருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, அவனுடைய வேண்டுகோளுக்கு விரோதமாக அவள் அதைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, ‘அசடு,அசடு அந்தரங்கமாகக் காதலிப்பவர்களுக்குத்தானே அந்தத் தொல்லையெல்லாம்? நாம்தான் பகிரங்கமாகக் காதலிக்கிறோமே, நமக்கு ஏன் அந்தத் தொல்லையெல்லாம்

கா.க - 13