பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 195

‘நீ என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டாம்; நான் உனக்கு மன்னிப்பு அளிக்கவும் வேண்டாம். அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தவர் மணி. ஆகவே, அது அவர் எனக்கு எழுதிய காதல் கடிதமாயிருக்கும் என்று நீ நினைத்துவிட்டாய் அதுதானே உண்மை?” என்றாள் பாமா

ஆம்’ என்பதற்கு அடையாளமாகத் தன் தலையை ஆட்டினாள் அவள்

பாமா சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: “இத்தனைக்கும் அந்தக் கடிதத்தை அவர் என்னிடம் ரகசியமாகக்கூடக் கொடுக்கவில்லை; பகிரங்கமாகத்தான் கொடுத்தார். அதுவும், மோகன் இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னான் என்று வேறு சொல்லிக் கொடுத்தார். அப்படியும் நீ இப்படி நினைக்கிறாய் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?-நீ அவரைக் காதலிக்கிறாய் என்று அர்த்தமா? இல்லை, இந்த உலகத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலிப்பதே குற்றம் என்று நீ நினைக்கிறாய் என்று அர்த்தமா?”

ரமா பெருமூச்சு விட்டாள்; பெருமூச்சு விட்டுவிட்டுச் சொன்னாள்: #

‘அவரை நான் காதலித்து என்ன பிரயோசனம்? அவர் என்னைக் காதலிக்க வேண்டுமே?”

“அப்படிச் சொல்லு உனக்காக நான் வேண்டுமானால் அவரிடம் தூது செல்லட்டுமா?”

‘ஐயோ, வேண்டாம்! அதற்காக அவர் இந்த ஆபீசை விட்டேப் போனாலும் போய்விடுவார்’ ‘போனால் என்னவாம், உனக்கு'ை ‘போகிறபோதும் வருகிறபோதும் அவரை நான் பார்த்துக்கொண்டாவது இருக்கிறேனே, அது கூட அல்லவா இல்லாமற் போய்விடும் எனக்கு’ என்றாள் அவள், பெருமூச்சுடன்.