பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காதலும் கல்யாணமும்

சுருட்டி, அதை ஜன்னல் வழியாக விட்டெறிவது போல் அவள் மேல் விட்டெறிந்து விட்டு, “மன்னிக்க வேண்டும்; குறி தவறி விட்டது’ என்றான் அவன், அசட்டுச் சிரிப்புடன்.

‘இல்லை, குறி தவறாமல்தான் விழுந்திருக்கிறது’ என்றாள் அவள், குனிந்த தலையுடன்

இதை அவள் எந்தத் தொனி'யில் சொன்னாள் என்பதைப் புரிந்துகொள்ள அவன் முயன்றுகொண்டிருந்த போது, கன்னத்தில் விழுந்தது ‘பளார் என்று ஒர் அறை -கலங்கினானா, காதல் மன்னன்? இல்லை; இன்னொரு கன்னத்தையும் காட்டினான், ஏசுநாதரைப் பின்பற்றி!-ஆனால் அவளோ அவனை ஏசுநாதராக்கவில்லை; அதற்குப் பதிலாக, ‘சீ, நீயும் ஒரு மனிதனா’ என்று ‘புகழ் மாரி’ பொழிந்துவிட்டுப் போய் விட்டாள்

இப்படி இரண்டாவது நாள் போயிற்று; மூன்றாவது நாள்...

‘உங்களுக்கு ஏதாவது தெரியவில்லையென்றால் என்னைக் கேளுங்கள்; சொல்கிறேன்’ என்றான் அவன், ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற மூதுரையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து.

இரங்கினாளா, காதல்கன்னி இல்லை; ‘எனக்கு ஏதாவது தெரியவில்லையென்றால், அது உங்களுக்கும் தெரியாமல்தான் இருக்கும்’ என்றாள் சுடச்சுட.

அவ்வளவுதான்; அசைக்க முடியாத நம்பிக்கை சற்றே அசைய, ‘ஏது, ரொம்ப அதிகப்பிரசங்கியா யிருப்பாய் போலிருக்கிறதே?’ என்றான் அவனும் சுடச்சுட.

‘யார் அதிகப்பிரசங்கி? என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் அதிகப்பிரசங்கியா, நான் அதிகப்பிரசங்கியா?” என்றாள் அவள், தான் அமர்ந்திருந்த நாற்காலியை அப்பால் இழுத்து விட்டுவிட்டு எழுந்து.