பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 காதலும் கல்யாணமும்

சொல்லுங்கள்; அவர் இந்த எத்தன்களுக்கெல்லாம் எத்தன்; அப்பன்களுக்கெல்லாம் அப்பன் போலீசாருக்கு அவர் ஒரு வார்த்தை ‘போனில் சொன்னால் கூடப் போதும்; பயபக்தியுடன் அவருடைய மகனைக் கொண்டு வந்து அவர்கள் அவரிடம் ஒப்படைத்துவிடுவார்கள் அது தெரியாது அந்தப் பயல்களுக்கு; நீங்கள் போங்கள் சார், போங்கள்’ என்று துரிதப்படுத்தினான் சங்கர்.

அதற்குள் அந்த நிலையைக் கடந்துவிட்ட மணியோ, ‘இதுவும் கேவலமாகத்தான் தோன்றுகிறது எனக்கு ஒரு தனி மனிதன் நினைத்தால் சட்டம் அவனுக்குத் தகுந்தாற்போல் வளைந்துகொடுக்கும் என்ற நிலை இந்த நாட்டில் உள்ளவரை நீதிக்கும் நேர்மைக்கும் இங்கே எப்படி இடம் இருக்க முடியும்?’ என்றான் பெருமூச்சுடன்.

‘இதெல்லாம் பொழுது போகாதபோது பேச வேண்டிய பேச்சு; இப்பொழுது வேண்டாம், சார் நீங்கள் போங்கள்; போய் அவரைப் பாருங்கள்!”

‘போகிறேன்! போகாமல் வேறு என்னதான் செய்யப் போகிறேன், வேறு என்னதான் செய்ய முடியப்போகிறது என்னால்?-சரி, இருக்கட்டும் சங்கர் அந்த மோகன் போலீசாருடன் போனபோது என்னிடம் ஏதாவது சொல்லச் சொன்னானா, உன்னிடம்?”

‘இல்லை சார், அவர்களைப் பார்த்ததும் அவர் பேயறைந்தவர்போல் ஆகிவிட்டார்! சர்மாஜி வந்து, ‘கவலைப்படாதீர்கள் சார், சந்தேகத்தின்பேரில்தான் உங்களைக் கைது செய்கிறார்கள்; சந்தேகம் தீர்ந்ததும் விடுதலை செய்துவிடுவார்கள்!’ என்று ‘சமாதான வலை விரித்தபோதுகூட அவர் முகத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லை’

‘'அடப் பாவி! அதுவா அவனுடைய பிரச்னையாக இருந்திருக்கும் அப்போது? ஒரு காரணமும் இல்லாமல் தனக்கு நேர்ந்துவிட்ட இந்த அவமானத்தை எப்படித்