பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 205

ஒரு நாளும் விரும்பமாட்டான் ஒட்டலிலேயே பாதி உயிர் போயிருக்கும் அவனுக்கு; அடுத்த பாதி ஆபீசில் போவதை அவன் விரும்புவானா, என்ன?

எதற்கு இதெல்லாம்?-சுந்தருக்கும் எனக்கும் சண்டை; அதற்காக என்னைப் பழி வாங்க எண்ணி அவன் அந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கிறான்; அதற்கு நான் இரையாவதற்குப் பதிலாக அவன் இரையாகிவிட்டான் என்று சொல்லிவிட்டால் போகிறது

‘என்ன சண்டை? என்று கேட்டால்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கும்-அதனாலென்ன, அந்தச் சண்டையில் அருணாவைச் சம்பந்தப்படுத்தாமல் யாரோ ஒருத்தி, அல்லது யாரோ ஒருவன் என்று சொல்லிவிட்டால் போகிறது

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் இன்னொரு சங்கடத்துக்கு உள்ளானான் அவன்!-அந்த வீட்டில் மோகனின் நண்பன் என்ற முறையில் அவனால் அருணாவுடன் பேச முடியும்; அன்னபூரணியம்மாளுடன் பேச முடியும்; ஆபத்சகாயத்துடன் பேச முடியாதோ-அவர் இவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுவார்; அல்லது, மடமடவென்று மாடி அறைக்குப் போய்விடுவார் காரணம் வேறொன்றுமில்லை; அவன் யோக்கியன், அத்துடன் ஏழை என்பதுதான்!

அத்தகையவருடன் இன்று தான் எப்படிப் பேச முடியும்? அன்னபூரணியம்மாளிடமோ, அருணாவிடமோ சொல்லி அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடச் சொல்வோமா?

அதுதான் சரி!-ஆனால், அந்தப் பயல் ஆபீசுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு என் அறையில் வந்து படுத்துக்கொண்டு விட்டானே, அதற்கு அவர் என்ன சொல்வாரோ என்னமோ அதை அவரிடம் சொன்னால் அவன் என்ன நினைப்பானோ, என்னமோ?