பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 காதலும் கல்யாணமும்

அந்தச் சங்கடத்திலிருந்தும் தப்ப வேண்டுமானால் இன்னும் ஏதாவது ஒரு பொய்யின் உதவியைத்தான் நாடவேண்டும் போலிருக்கிறது!-வேறு வழி, நாய் வேடம் போட்டால் குரைத்துத்தானே தீரவேண்டும்?

இந்த முடிவுடன் அவன் துணிந்துஆபத்சகாயத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அவர் இவனைக் கண்டதும் வழக்கம்போல் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை; அவனுடன் கீழே இருக்கப் பிடிக்காமல் மேலே போய் விடவும் இல்லை. அகமும் முகமும் ஒருங்கே மலர, ‘வா, தம்பி, வா!’ என்று அவனை அன்புடன் வரவேற்று, மாடி அறைக்கு அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டு, ‘அன்னபூரணி, அன்னபூரணி! தம்பிக்கு ஏதாவது பலகாரம் இருந்தால் கொண்டு வாயேன்?’ என்றார் கனிவுடன், கீழே இறங்கி. இதைக் கேட்ட மணிக்கு எப்படியிருந்ததோ என்னமோ அவன் தலை கிறுகிறுவென்று சுழல, அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டான்

29. அணையப் போகும் விளக்குகள்

சிறிது நேரத்துக்கெல்லாம் மேலே வந்த ஆபத்சகாயம் மயக்கமுற்ற நிலையில் இருந்த மணியைக் கண்டதும் திடுக்கிட்டு, ‘என்ன மணி, என்ன உடம்புக்கு?’ என்று கேட்டுக் கோண்டே அவன் தோளைப் பிடித்துக் குலுக்கினார்.

“ஒன்றுமில்லையே’ என்று கண் விழித்த மணி, தனக்கு எதிர்த்தாற்போல் பலகாரமும் கையுமாக நின்ற அன்னபூரணியம்மாளைக் கண்டதும், ‘உங்களுக்குச் சேதி தெரியாதா?’ என்றான், தன்னுடைய நிலைக்குத் திரும்பி.

‘தெரியுமே மோகன் அகப்பட்டுக்கொண்டு விட்டானே, அதைத்தானே சொல்கிறாய் நீ?” என்றார் ஆபத்சகாயம் குறுக்கிட்டு.