பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 காதலும் கல்யாணமும்

‘அப்படியா? அந்த வாத்து இனி எந்த முட்டை இட்டாலும் அது உங்களுக்குப் பயன்படப்போவதில்லை; ஏனெனில் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பதவியில் தற்போது நீங்கள் இல்லை. ஆகவே...’

‘ஆகவே என்ன?” ‘யாரோ ஒரு பேராசை பிடித்தக் குடியானவன் செய்தது போல நானும்...’

‘அதன் வயிற்றை அறுத்துப் பார்க்கப் போகிறாயா?” ‘இல்லை; அதன் கழுத்தைக் கின்ளி எறியப் போகிறேன்’

‘அடப் பாவி அப்படியானால் அந்தப் பேராசை பிடித்த குடியானவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது . ஒரு வித்தியாசமும் இருக்கப்போவதில்லை1பேசாமல் நான் சொல்வதைக் கேள்; நீயும் மோகனும் எனக்குத் தெரியாமல் இதுவரை செய்து வந்த அந்தத் தொழிலுக்கு...’

‘எந்தத் தொழிலுக்கு ‘ ‘அதுதான் கள்ளத்தனமாக அபினைக் கடத்தும் தொழிலுக்கு’

‘நீங்களுமா அதை நம்புகிறீர்கள்?” ஆபத்சகாயம் சிரித்தார்; சிரித்துவிட்டுக் கேட்டார்: ‘இன்னுமா நீங்கள் அதை எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறீர்கள்?”

இதைக் கேட்டவுடன் மணியும் சிரித்தான்; சிரித்து விட்டுச் சொன்னான்:

‘'நாய் விற்ற காசு சிலருக்குக் குரைக்காமல் இருக்கலாம்; அந்தச் சிலரில் ஒருவனாக என்னையும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்’

‘உன்னை மட்டுமா நினைக்கிறேன், என்னுடைய மகன் மோகனையும் சேர்த்துத்தானே நினைக்கிறேன்)-கம்மா