பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 காதலும்கல்யாணமும்

இந்தச் சங்கடம் உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. அதைத்தானே சர்மாஜியும் சொல்கிறார், எனக்குத் தெரிந்திருந்தால் கூட வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட்டிருப்பேன் என்று’

‘போடுவார், போடுவார் ஏன் போடமாட்டார்? எல்லாம் அந்த அயோக்கியரால் வந்த வினைதானே?”

ஆபத்சகாயம் மறுபடியும் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்:

‘யோக்கியராவது, அயோக்கியராவது பணமிருந்தால் இந்த உலகத்தில் யாரும் யோக்கிராயிருக்க மாட்டார்கள்; அயோக்கியராய்த்தான் இருப்பார்கள். ஏனெனில் ‘சுகம் என்று ஒன்று இருக்கிறதே, அது யோக்கிய ‘ருக்குக் கிட்டுவது இல்லை. எட்டுவதுமில்லை; அயோக்கியருக்குத்தான் அது கிட்டவும் கிட்டுகிறது, எட்டவும் எட்டுகிறது’

“இருக்கலாம்; ஆனால் நீங்கள் சுகம் என்று நினைப்பது எனக்குத் துக்கமாகவும், நான் சுகம் என்று நினைப்பது உங்களுக்குத் துக்கமாகவும் இருந்தாலும் இருக்கலாம் அல்லவா?’’

என்ன காரணத்தாலோ இதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், ‘ஓ, நீ அந்தக் கட்சியைச் சேர்ந்தவனா?” என்று இழுத்தார் ஆபத்சகாயம்.

‘எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் என்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டதையே அவரிடம் திருப்பிக் கேட்டான் மணி.

“அதுதான் சோற்றுக்கில்லாத பயல்களெல்லாம் ஒன்று சேர்ந்து சோசலிசம். சோசலிசம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்தக் கட்சியைச் சேர்ந்தவனா நீ என்று கேட்கிறேன்!”

“ஆமாம்; ஆனால் சோற்றுக்கு இருக்கும் புயல்கள் கூட இப்போது அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பது