பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 காதலும்கல்யாணமும்

‘வா, மோகன் எனக்காக விரித்த வலையில் நீ விழுந்து விட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்; எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த விபரீதத்துக்காக என்மேல் நீ கோபம் கொண்டிருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். என்ன, நான் நினைப்பது சரிதானா?” என்றான் மணி, அவனையே இமை கொட்டாமல் கவனித்தபடி.

‘நடந்தது நடந்துவிட்டது; அதற்கென்ன இப்போது?” என்றான் அவன் சோர்வுடன்.

அவன் அளித்த பதில் மணிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே, ‘'சரி, வருகிறேன்!’ என்றான் அவனும் சோர்வுடன்.

“எங்கே வந்தாய், எங்கேப் போகிறாய்?” ‘உனக்காகத்தான் உன் அப்பாவைப் பார்க்க வேண்டு மென்று வந்தேன். நான் வருவதற்குள் அவர் உனக்காகச் செய்ய வேண்டிய ஏற்பாட்டையெல்லாம் செய்து விட்டிருந்தார்; நீயும் வந்து சேர்ந்துவிட்டாய். இனி எனக்கு என்ன வேலை இங்கே? நான் வருகிறேன்’ என்று நடையைக் கட்டினான் மணி.

‘நில்; நானும் வருகிறேன்!” என்றான் மோகன். ‘நீ வருவதாயிருந்தால் இங்கிருந்து நான் போக மாட்டேன்’

“ஏன்?” ‘இப்போது நான் தனியாகப் போக வேண்டும்’ ‘அப்படிப் போக வேண்டாம் என்பதற்காகத்தான் நானும் வருகிறேன் என்கிறேன்”

‘ஏன், என்ன நடந்தது. அங்கே?” “அங்கே நடந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்; இப்போது நீ ஒட்டலுக்குத்தானே போகப்போகிறாய்?”

“ஆமாம்!"