பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 219

‘யார் இல்லை என்கிறார்கள்? உழைப்பு நல்லதுதான் உங்கள் உடம்புக்கு; உழைப்பே செல்வம்தான், உங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பவர்களுக்கு நான் அதைப் பற்றியும், அவர்களைப் பற்றியும் பேசவில்லையே? உங்களைப் பற்றியும் உங்களுடைய செல்வத்தைப் பற்றியுமல்லவா பேசுகிறேன்?”

‘பேசுங்கள், பேசுங்கள்; என்னப் பேசினாலும் நீங்கள் சொல்லும் குறுக்கு வழியில் நாங்கள் இறங்கப் போவதே யில்லை’

‘இறங்கிய பிறகு இறங்கப் போவதேயில்லை என்று என்னிடம் ஏன் சாதிக்கிறீர்கள் இவனுக்குத்தான் நான் அப்பாவேத் தவிர, உனக்கு நான் அப்பா இல்லையே? இவன் அதை என்னிடம் சொல்லப் பயந்தாலும், நீ அதை என்னிடம் தைரியமாகச் சொல்லலாமே?”

‘ஏற்கெனவே நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன்; அதற்குமேல் என்ன சொல்வதென்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றான் மணி, அலுப்புடன்.

‘போடா, போ எதைச் சொல்ல வேண்டுமோ, அதை நீ இதுவரை அவரிடம் சொல்லியிருக்கமாட்டாய்; அதைச் சொல்வது உன்னைப்பற்றி நீயே பெருமையடித்துக் கொள்வதாயிருக்கும் என்று நீ நினைத்திருப்பாய்1-விஷயம் இதுதான் அப்பா! கள்ளக்கடத்தல் கூட்டத்தைச் சேர்ந்த யாரோ ஒருவன், ஒரு நாள் ஒரு பெண்ணை ஏமாற்றி ஒட்டல் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்து அவளுடைய சம்மதமில்லாமல் அவளைக் கெடுக்கப் பார்த்திருக்கிறான்; இவன் அதில் தலையிட்டு அந்தப் பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றியிருக்கிறான்; அது பிடிக்க வில்லை அவனுக்கு; அதற்காக இவனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கவும் முடியவில்லை அவனால், ஆகவே சர்மாஜியின் உதவியுடன் அவன் இவனுக்காக அங்கேக்