பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 காதலும்கல்யாணமும்

கண்ணி வைத்திருக்கிறான்; அந்தக் கண்ணியில் அவன் சிக்குவதற்குப் பதிலாக நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன்; அவ்வளவுதான் விஷயம்!-இப்பொழுதாவது புரிந்ததா, உங்களுக்கு?’ என்றான் மோகன், மணியைப் பின்னால் தள்ளிவிட்டு அவனுக்கு முன்னால் தான் வந்து நின்று.

அவன் சொன்னதையும் அவர் நம்பவில்லை; ‘என்ன கதை இதெல்லாம்?’ என்றார் நகைப்புடன்.

அப்போது அந்த வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து இறங்கி வந்த வாலிபன் ஒருவன், ‘ஆபத்சகாயத்தின் வீடு இதுதானே?’ என்றான், ஆபத்சகாயத்தை நோக்கி.

‘என் பெயர் சுந்தர்; சுகானந்தத்தின் மகன்...” அவன் முடிக்கவில்லை; அதற்குள் அவன் மேல் பாய்ந்து விட்டான் மணி

அவ்வளவுதான்; வேங்கையின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டிப் போல் அலறினான், அவன்!

31. எங்கே சர்மாஜி?

‘ஏய் மணி, ஏய் மணி!”

அதட்டினார் ஆபத்சகாயம்-அவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவும் இல்லை; அவரை நோக்கித் திரும்பவும் இல்லை. பசி வேளையில் பருந்துக்குக் கிடைத்த கோழிக் குஞ்சு போல் தனக்குக் கிடைத்த சுந்தரை அவன் தன் ஆத்திரம் தீரும் வரை அடித்து நொறுக்கிவிட்டு, ‘இப்போது கூப்பிடு உன் போலீசை சந்தோஷமாகக் கையை நீட்டுகிறேன், என்னைக் கைது செய்து கொள்ள!’ என்று கத்தினான்!

சுந்தரோ, உருண்டு புரண்டு எழுந்த நிலையில், ஓர் அடி கூட ஆடாமல் அசையாமல் எடுத்து வைக்க முடியாமல்