பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 221

தட்டுத் தடுமாறி வந்து அவன் காலடியில் விழுந்தான். வழியில் அடிபட்டு விழுந்த நாயை ஒரு பக்கமாக இழுத்து விடுவது போல் அவனை இழுத்து அப்பால் விட்டுவிட்டு, ‘'நான் வருகிறேன். எனக்காகப் போலீசார் மட்டும் அங்கே காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; சர்மாஜியும் காத்துக்கொண்டிருப்பார்!” என்று விரைந்தான் மணி.

அவன் சென்ற திசையையே ஒரு கணம் பார்த்துக் கொண்டிருந்த ஆபத்சகாயம், “இந்த மாதிரிப் பயல்களுட னெல்லாம் நீ சேரவே கூடாது, மோகன் இவனால் எந்தச் சமயத்திலும் உனக்கு ஆபத்து நேரலாம்!” என்றார் மறுகணம் தன் மகனின் பக்கம் திரும்பி.

“ஆபத்து அவனால் நேரவில்லை; இதோ இருக்கிறானே, இவனால்தான் நேர்ந்தது!’ என்றான் அவன், கீழே விழுந்துக் கிடந்த சுந்தரை சுட்டிக் காட்டி.

‘அப்படி என்ன ஆபத்து நேர்ந்துவிட்டது, இவனால். யாரோ ஒருத்தியைத்தானே இவன் ஒட்டல் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தான், உங்கள் வீட்டுப் பெண்ணை இல்லையே?’ என்றார் அவர், கொஞ்சம் காரசாரமாக.

‘இங்கேதான் மணிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் காண்கிறேன். ஏனெனில், உங்களைப் போல் அவன் நினைப்பதில்லை; இந்த உலகத்திலுள்ள அத்தனைப் பெண்களையுமே அவன் தன் வீட்டுப் பெண்களாக நினைக்கிறான்!” என்றான் அவன், அப்போதும் அமைதியாக.

‘நினைப்பான், நினைப்பான்; உடம்பில் திமிர் உள்ளவரை அப்படித்தான் நினைப்பான். இன்னொரு முறை அவன் இங்கே வரட்டும்; அவனை நான் பார்த்துக்கொள்ள வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்கிறேன்!”

“இவனும் அப்படித்தான் சொன்னான், அவனைப் பார்த்துக் கொள்ளவேண்டிய விதத்தில் பார்த்துக்