பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 காதலும்கல்யானமும்

‘இன்னும் ஒரு வார காலத்துக்கு நீங்கள் அவரை இங்கே நிச்சயம் பார்க்க முடியாது’

“சரி, போலீசார் என்ன ஆனார்கள்?” ‘ஆபத்சகாயத்தின் அருளால் அவர்கள் வந்த வழியே திரும்பிப் போய்விட்டார்கள். அதில் நம் சர்மாஜிக்கு அளவு கடந்த ஏமாற்றம்; அந்த ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொள்ளத் தான் அவர் ஆபத்சகாயத்தைத் தேடிக்கொண்டு வந்தார். அங்கே நீங்கள் சுந்தரைக் கவனித்துக்கொண்டிருக்கவே, அவர் வந்த வழியேத் திரும்பிவிட்டார்’

“வருத்தமாயிருக்கிறது சங்கர், இதைக் கேட்க எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது. யாராயிருந்தாலும் அவர்கள் என்னைக் கண்டதும் அன்பு செலுத்த வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேனே தவிர, அஞ்ச வேண்டுமென்று ஒரு நாளும் விரும்பியதில்லை; விரும்பப்போவதும் இல்லை. அப்படியிருந்தும் சந்தர்ப்பம் சில சமயம் இப்படிச் சதி செய்து விடுகிறது; இதற்கு நான் என்ன செய்யலாம்?”

இப்படிக் கேட்டு அவன் தன் முகவாய்க்கட்டையைத் தேய்த்து விட்டுக் கொண்டதுதான் தாமதம், ‘இறங்கி விட்டீர்களா, தத்துவ விசாரத்தில்? சரி, இறங்குங்கள்; நான் போய் ஒரு கப் காபி கொண்டு வருகிறேன், உங்களுக்கு ‘ என்று சங்கர் கீழே இறங்கினான்; மணி அதே விசாரத்துடன் தன் அறைக்குள் நுழைந்து, சட்டையைக் கூடக் கழற்றாமல் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

என்ன செய்வது, இந்த ஒட்டலை விட்டே ஓடிப் போய் விடுவதா? இல்லை, இந்த உலகத்தை விட்டே மறைந்து போய் விடுவதா?

அந்த சுந்தர் அவனைக்கூட அன்று நான் அடிக்க வில்லை; அருணாவின் மேல் கொண்ட சபலத்தால் அப்படி நடந்துக் கொண்டு விட்டான் என்று எண்ணி, அவன் நழுவுவதைப் பார்த்தும் பார்க்காதவன் போல் இருந்து விட்டேன். அந்த அருணாவுக்குப் பிறகு அவன் இன்னொரு