பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 21

‘அப்படியா சமாசாரம்? நான்தான் நீங்கள் கேட்பதற்கு முன்னாலேயே கொடுத்துவிட்டேனே?’ என்றாள் அவள், தன் கையைக் காட்டி.

அவன் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டே சொன்னான்:

‘அதில் கூடப் படுசிக்கனம் நீ; ஒன்றுக்கு மேல் கொடுக்கவில்லையல்லவா?”

அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: ‘பாவம், உங்களை நான் அடித்திருக்கக் கூடாது’ அதுதான் சமயமென்று, ‘'அடிக்காத } a அணைக்காது’ என்றான் அவன்

‘அணைக்கும், அணைக்கும் என்று சொல்லிக் கொண்டே அவள் நடந்தாள்; அவன் அவளைத் தொடர்ந்தான். ‘ஸ்கூட்டரைத் தள்ளமுடியாமல் தள்ளிக் கொண்டுதான்

இந்தச் சமயத்தில் அவனைப் பார்த்துக்கொண்டே அவனுக்குப் பின்னால் சைக்கிளில் வந்த மணி, “என்னடா, ரிப்பேரா?’ என்றான், தன் கால்களில் ஒன்றையே ‘பிரேக்காகப் போட்டுத் தன்னுடைய சைக்கிளை நிறுத்தி.

‘ரிப்பேரும் கிடையாது; அதை நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது!” என்றான் மோகன், அவனைப் பழிக்குப் பழி வாங்குவது போல!

அப்போதுதான் அவனுக்கு முன்னால் போகும் பெண்ணைப்பற்றி அன்றொரு நாள் அவன் தன்னைக் கேட்ட போது, தானும் அதே மாதிரி சொல்லி அவளை மட்டம் தட்டிவிட்டுப் போனது அவனுடைய நினைவுக்கு வந்தது. உடனே வழக்கத்துக்கு விரோதமாக அவன் முதுகில் லேசாகத் தட்டி, “கோபித்துக்கொள்ளாதேடா இந்த நாட்டுக் காளைகளையும் கன்னிகளையும் காதல் கோழைகளாக்கி விடுகிறது என்று நினைப்பவன் நான்; என்னிடம் வந்து நீ