பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 காதலும்கல்யாணமும்

வேண்டுமானால் வாழைப்பழம் தின்பவர்களின் வாயை முகர்ந்துப் பார்; அவர்களுடைய வாயெல்லாம் சாராய வாடை அடிப்பது தெரியும்’

‘அட, என் கண்ணே உன் அப்பாவுக்கு வெறும் சோடாப் பிடிக்காதபோது, உனக்கு மட்டும் வெறும் வாழைப்பழமா பிடித்துவிடப் போகிறது? போ போ போய்ப் படு, போ!’ என்றாள் அவள், தன் தலையில் லேசாகத் தட்டிக்கொண்டே.

ரவல் காரின் சுகத்தை இலவசமாக அனுபவித்துக் கொண்டேச் சென்ற ஆபத்சகாயத்துக்கு எத்தனையோச் சிந்தனைகள்-எல்லாம் எதிர்காலத்தைப் பற்றியவைதான். சுகானந்தத்தைத் தான் சந்தித்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை; அதற்குள் அவர் தன்னை மறுபடியும் அழைக்கிறார் என்றால், அது எதற்காக இருக்கும்? அருணாவின் கல்யாண விஷயமாக இருக்குமா, அல்லது...

அப்படியிருந்தால் அதில் அவர் இவ்வளவு அவசரம் காட்டலாமா? அதிலும், தலைக்கு மேல் உயர்ந்த தறுதலைப் பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தன் கையில் வைத்துக்கொண்டு?

அனுப்பவே அனுப்பினார் அவனைl-சினிமா நடிகைகள் சொல்லிக்கொள்கிறார்களே, தாங்கள் பெற்ற பிள்ளையைத் தங்கள் தம்பி என்று. அந்த மாதிரி அவனையும் தன் தம்பி என்றாவது சொல்லிக்கொள்ளச் சொன்னாரா-அதுவும் இல்லை; ‘யாரப்பா நீ?” என்று கேட்டால், அவன் கொஞ்சங்கூடக் கூசாமல் ‘நான்தான் சுகானந்தத்தின் மகன்’ என்கிறான்!

நல்ல வேளை, அருணா அப்போது வீட்டில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பாள்?

அவள் நினைப்பதென்ன, தனக்கே இவ்வளவு பெரிய பிள்ளையைப் பெற்று வைத்திருக்கும் ஒரு தந்தைக்காத் தன்