பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 காதலும் கல்யாணமும்

‘'எதற்கு?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டார், ஆபத்சகாயம்.

“அதைச் சொல்லத்தானே உங்களை நான் இங்கே வரச் சொன்னேன்? உட்காருங்கள்!’ என்று சுகானந்தம் அவரைத் தன் அறையில் உட்கார வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தார்.

அப்போது கிட்டன் வந்து, ‘ஏதாவது கொண்டு வர வேண்டுமா?” என்று வழக்கத்தையொட்டிக் கேட்டான்.

‘ஒன்றும் வேண்டாம்; நான் கூப்பிடும் வரை நீ இங்கே வரவும் வேண்டாம்’ என்று சொல்லி அவனைக் கீழே அனுப்பி விட்டு, ‘அந்தப் பயல் சுந்தர் இருக்கிறானே, அவன் இன்று என்னைச் சுட்டுவிடப் பார்த்தான்!” என்று ஆரம்பித்தார் அவர்.

“என்ன என்று வாயைப் பிளந்தார் இவர். “ஆமாம் ஐயா, ஆமாம். பணம் பத்தும் செய்யும்’ என்கிறார்களே, அவற்றில் இதுவும் ஒன்று போலிருக்கிறது” என்றார் சுகானந்தம்.

‘என்னால் நம்ப முடியவில்லையே, இதை’ என்றார் ஆபத்சகாயம்.

‘'நானும்தான் இந்த நிமிஷம் வரை அதை நம்பவில்லை; ஆனாலும் அவனைப் பற்றிய சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை’

‘என்ன நடந்ததென்று கொஞ்சம் விவரமாய்த்தான் சொல்லுங்களேன்?”

‘இன்று காலை அவன் என் கைத்துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு தோட்டத்திலிருந்து ஒரு மரத்தைக் குறி பார்த்துக் சுட்டுக்கொண்டிருந்தான். அப்போது நான் அந்தப் பக்கமாகப் போனேன். ஒரு குண்டு என் தலைக்கு மேல் சென்றது. என்னடா? என்றால், குறி தவறிவிட்டது என்று கொஞ்சம்கூடப் பயமில்லாமல் இளிக்கிறான்’

‘சிறு பிள்ளைதானே, விளையாட்டுத்தனமாயிருக்கும்'