பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 235

காட்டிக் கொள்ளாமல், ‘சுந்தரே தன்னை யாரும் அடிக்க வில்லை என்று சொல்லும்போது, அந்த மணியை நாம் என்ன செய்யச் சொல்வது? பேசாமல் விட்டுவிடச் சொல்லுங்கள்’ என்றார் அந்த அறையின் முகட்டைப் பார்த்தபடி.

அப்படியே சொல்லி, ரிசீவரை ‘ரெஸ்'டின் மேல் வைத்து விட்டுப், ‘பார்த்தீர்களா, பணக்காரர்களுக்குள்ள அருங்குணங்களில் இதுவும் ஒன்று -அதாவது, உதை பட்டால் கூட அதை அவன் வெளியேச் சொல்லமாட்டான், தன்னுடைய பெருமைக்கு அது இழுக்கு என்று’ என்றார் அ.ெ117.

38. நீதியும் மனிதனும்

தெய்வம் தவறு செய்கிறதோ இல்லையோ, மனிதன் தவறு செய்கிறான். தவறு செய்யாவிட்டால் அவன் மனிதன் அல்ல; தெய்வம்!

இப்படி ஒரு நியதி இந்த உலகத்தில் தொன்றுத் தொட்டு இருந்து வருகிறது. இதற்கு யார் காரணமோ, எது காரணமோ அது யாருக்கும் தெரியாது.

ஆனால் இந்தத் தவறு செய்யும் மனிதன் இருக்கிறானே, இவன் ‘மனிதன் தவறு செய்வது இயற்கை என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிடுவதில்லை. அந்தத் தவற்றை விசாரிக்க இன்னொரு மனிதனின் உதவியை நாடுகிறான்; அதற்குரிய தண்டனையை வழங்குமாறு வேறொரு மனிதனின் தயவை வேண்டுகிறான்

இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே தவறு செய்யக் கூடிய மனிதர்கள்தான் என்றாலும், நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாக அவன் மனப்பால் குடிக்கிறான்!

வேடிக்கையாயில்லையா, இது?