பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 243

விட்டேன் என்று போலீசாரிடம் சொல்லிவிட்டு வருவதற் காக என்றார். நான் சிரித்தேன். ‘என்னடா சிரிக்கிறாய்?” என்றார். ‘உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவார்கள், சார் என்றேன். ‘அனுப்பினால் அனுப்பட்டும்’ என்று அவர் போய்விட்டார்!”

‘இதெல்லாம் ஏழு மணிக்குத்தானே நடந்தது?” “ஆமாம், சார்!” ‘அவன் இப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தானேடா என் அம்மாவால் அவனை நான் அங்கே பார்த்துப் பேச முடியாமற் போய்விட்டது’

‘அப்படியானால் போலீசார் அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரி'க்கும் அனுப்பவில்லை, லாக்-அப்"பிலும் தள்ளவில்லை என்று அர்த்தம்’

‘அர்த்தம் சரி; இப்போது எங்கே போயிருப்பான் அவன் ’’

“வேறு எங்கே போயிருக்கப்போகிறார், கடற்கரைக்குப் போயிருப்பார்’

‘நீ சொல்வது சரி, எனக்கும் இப்போது கடற்கரைக்குப் போனால் தேவலை என்று தோன்றுகிறது. நான் வருகிறேன். முடிந்தால் அவனை நான் அங்கேயே பார்த்துக் கொள்கிறேன்; இல்லாவிட்டால் அவன் வந்ததும் நீ சொல், இன்றிரவு நானும் இங்கே வந்து படுத்துக்கொள்ளப் போகிறேன் என்று’

மோகன் போய்விட்டான். “தாராளமாகப் படுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இருக்கவே இருக்கிறது, வராந்தா!’ என்று சொல்லிக்கொண்டே சங்கர் கதவைச் சாத்திக் கொண்டான்.