பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 காதலும் கல்யாணமும்

சாதாரண மனிதன் மிகமிகச் சாதாரண மனிதன்! நான் என்ன செய்வேன், தெரியுமா?.. அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவன் நெஞ்சில் மூண்டது வெஞ்சினம்; அந்த வெஞ்சினத்தோடு அவன் சொன்னான்:

என்னை எவனாவது ஒரு செருப்பால் அடித்தால், அவனை நான் இரண்டு செருப்பால் அடிப்பேன்; என்னுடைய பற்களில் இரண்டை எவனாவது உதிர்த்தால், அவனுடைய பற்களில் நான்கை நான் உதிர்ப்பேன்!-ஆமாம்! பல்லை நறநறவென்று கடித்தபடி இதைச் சொல்லி முடித்ததும், அவன் ஒரு காலைச் சட்டென்று தூக்கித் தன் பலம் கொண்ட மட்டும் பூமியை ஓர் உதை உதைத்தான்

அத்துடன் நிற்கவில்லை அவன்; தன் கால்களில் இருந்த செருப்புகள் இரண்டையும் கழற்றி எடுத்து, அந்தக் கையில் ஒன்றும் இந்தக் கையில் இன்னொன்றுமாக ஏந்தி, தனக்கு முன்னால் நிற்கும் எதிரியை அடிப்பதுபோல் அப்படியும் இப்படியுமாக ஓங்கி ஓங்கி அடித்தான்!-அதன் பலன்?-ஒன்று கடலில் விழுந்தது; இன்னொன்றுக் கரையில் விழுந்தது!

அப்பாடா! இப்போதுதான் தன்னையும் மீறித் தனக்கு வந்த ஆத்திரம் கொஞ்சம் தணிந்தது போலிருந்தது அவனுக்கு-கரையில் விழுந்து கிடந்த ஒற்றைச் செருப்பைப் பரிதாபத்துடன் பார்த்தான்; பார்த்துவிட்டுச் சொன்னான்:

இனி உன்னால் எனக்குப் பிரயோசனமில்லை! -உன் னால் மட்டும் என்ன, இந்த உலகத்தில் ஒற்றையாயிருக்கும் எதனாலுமே யாருக்கும் எந்தவிதமான பிரயோசனமும் இருக்காது போலிருக்கிறது! அப்படிப் பார்த்தால், நானும் தான் ஒற்றையாயிருக்கிறேன் இந்த உலகத்தில்; என்னாலும் எந்தவிதமான பிரயோசனமும் இருக்காதோ?

ஏன் இருக்காது?-இரட்டையாயிருக்கும் செருப்பைப் போலவே ஒற்றையாயிருக்கும் குடையும் மனிதனுக்கு