பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 23

இரண்டாவது பஸ் வந்து நின்றது.அதிலும் வழக்கம் போல் ஏறி உட்கார்ந்துவிடவில்லை, அவள்-நின்றாள்!

மூன்றாவது பஸ் வந்து நின்றது. இதையுமா அந்தப் பைத்தியத்துக்காக விட்டுவிட்டு இங்கேயே நிற்பது? என்று அவள் கொஞ்சம் யோசித்தாள்.அதற்குள், ரைட்” என்றான் கண்டக்டர்; அவளும் ரைட்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள், அவனுடன் சேர்ந்து

‘ஏன் இப்படி? எதற்காக இன்று தனக்கு இந்த நிலை? அதுதான் தெரியவில்லை, அவளுக்கு?

அதற்குள் அங்கே வந்து சேர்ந்த மோகன், ‘எனக்குத் தெரியும், எனக்காக இன்று நீ இங்கே காத்துக் கொண்டிருப்பாய் என்று!” என்றான் செயற்கையான “சினிமாச் சிரிப்'புடன்.

‘'நான் ஒன்றும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்க வில்லை: பாழாய்ப் போன பஸ் வந்திருந்தால் எப்பொழுதோ பறந்து போயிருப்பேனாக்கும்?’ என்றாள் அவள், தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு.

‘பொய்! அந்தப் பெரிய மனுஷனுடன் அங்கே பேசிக் கொண்டிருந்தாலும், எனக்காக நீ இங்கே கோட்டை விட்டுக் கொண்டிருந்த பஸ்களை எண்ணத் தவறவில்லை நான்-வேண்டுமானால் இன்னொரு முறை எண்ணிக் காட்டட்டுமா?-ஒன்று, இரண்டு, மூன்று!” என்று அவன் கை விரல்களை ஒவ்வொன்றாக விட்டு எண்ணிக் காட்டிவிட்டு, ‘என்ன, சரிதானா?” என்றான் அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து.

அவ்வளவுதான்; அதற்குமேல் சமாளிக்க முடியவில்லை அவளால்-களுக்கென்று சிரித்துவிட்டாள்!

‘அகப்பட்டுக் கொண்டாயா? வா, கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்துவிட்டுப் போவோம்!’ என்றான் அவன்.