பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 251

கடிதத்தை இதோ நான் இருந்தது இருந்தபடி இருந்த இடத்திலேயே வைத்து விட்டேன்!

தன்னையும் மீறிக் கரகரத்த குரலில் இவ்வாறு சொல்லிக் கொண்டே, அந்தக் கடிதத்தை இருந்தது இருந்தபடி இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினான் மணி.

அப்போது, ‘என்ன கடிதம், ஏன் இந்தக்கோலம்?’ என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தான் மோகன்.

‘என்னை ஒன்றும் கேட்காதே; அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார், தெரியும்’ என்றான் மணி, அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், கடிதத்தை மட்டும் முதுகுப்புறமாகக் கையை நீட்டி அவனுக்குச் சுட்டிக் காட்டி. மோகனும் அதற்குமேல் அவனை ஒன்றும் கேட்கவில்லை; குனிந்து கடிதத்தை எடுத்தான்.

35. ஜன்னலுக்கு வெளியே!

அவர் என்ன ஆகியிருப்பார்?” இப்படி ஒரு கேள்வியைத் தனக்குத் தானே போட்டுக் கொண்டு அன்றிரவு முழுவதும் பாமா தன் வீட்டுக்குள்ளேயே நடந்து பார்த்தாள்; நின்று பார்த்தாள்; படுத்துப் பார்த்தாள்; எழுந்து உட்கார்ந்தும் பார்த்தாள் - அக்காவின் லேசான குறட்டை ஒலிதான் அதற்குப் பதிலாகக் கிடைத்ததே தவிர, வேறொரு பதிலும் கிடைக்கவில்லை!

அவளுக்குத் தெரியும், அந்த மாதிரி வழிக்கெல்லாம் அவர் போகக் கூடியவர் அல்லவென்று பிறருக்குத் தெரியுமா, அது?

அதிலும், யாரோ ஒருப் புண்ணியவான் செய்த சூழ்ச்சி அது என்று வேறு சொல்கிறார்கள். உலகத்தில் எப்போதுமே முதல் வெற்றி சூழ்ச்சிக்குத்தானே கிடைக்கிறது?. அந்த வெற்றி அதற்கும் கிடைத்தால் தன்னுடைய கதி?...