பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 காதலும் கல்யாணமும்

அவருடைய பிரிவால் தனக்குப் பால் கசக்காது; ஏனெனில் தான் பாலே சாப்பிடுவதில்லை. படுக்கையும் நோகாது; ஏனெனில் தனக்குப் படுக்கை என்று ஒன்று இல்லவேயில்லை. - எப்போதும் உறுத்தும் கோரைப் பாய்தான் அப்போதும் உறுத்தும்!

ஆனால்...

ஆனால் என்ன? - முதல் வெற்றி சூழ்ச்சிக்குக் கிடைத்தாலும், இரண்டாவது வெற்றி நிச்சயம் தர்மத்துக்குக் கிடைக்கும்; அந்த வெற்றியும் இன்றிரவே கிடைத்து விட்டால்? - எனக்கு நிம்மதி!

இல்லாவிட்டால்...

ஐயாவுக்கும், அம்மாவுக்கும் அது தெரியலாம்; அவர்கள் அதை நம்பி, ‘போயும் போயும் அவனைக் கட்டிக் கொண்டா மாரடித்தாள், இவள் என்று நினைக்கலாம்.

அதற்குப் பிறகு இருக்கவே இருக்கிறாள் அக்கா, ஒன்றும் இல்லாததற்கெல்லாம் ஒப்பாரி வைக்க

இந்தச் சங்கடங்களிலிருந்தெல்லாம் தான் தப்ப வேண்டுமானால் இன்றிரவு அவர் காதும் காதும் வைத்தாற்போல் விடுதலையாகி வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும்- சேர்ந்திருப்பாரா? சேர்ந்து விடுவாரா?

யாருக்குத் தெரியும்? - இங்கே வந்து இப்படித் தவித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் பேசாமல் மணி சாருடனேச் சென்றிருந்தால், விஷயத்தை உடனேத் தெரிந்து கொண்டு வீடு திரும்பியிருக்கலாம். அவர் என்னமோத் தன்னை அழைக்கத் தான் அழைத்தார்; தான்தான்...

எங்கே அழைத்தார், அதற்குள்தான் யாரோ ஒருவன் அந்தச் சேதியை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்து விட்டானே? அவன் வந்ததும், நீங்கள் போங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, அவர்தான் தன்னை அனுப்பிவிட்டாரே?...