பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 253

சட்டம் எல்லாருக்கும் பொது என்கிறார்கள்; அப்படி யிருக்கும்போது முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதற்காக அது வளைந்துக் கொடுககுமா? - அப்படியே வளைந்துக் கொடுத்தாலும் அவர் அதை விரும்பலாம்; மணி சார் விரும்புவாரா? - பணம் எல்லாருக்கும் பொதுவா யில்லாத வரை, சட்டம் எல்லாருக்கும் பொதுவாயிருக்க முடியாது என்று சொல்பவராயிற்றே, அவர்

அது என்னமோ உண்மைதான்; ஆனாலும் இவருக்கு வந்த ஆபத்து தவறிப்போய் அவருடையத் தலையில் விழுந்திருக்கும்போது...

எந்தக் குறிக்கோளும் கொஞ்சம் குறி தவறத்தானே செய்யும்?

ஆகவே, ‘எப்படியாவது வெளியே வந்தால் போதும்!” என்றுதான் இவரும் நினைப்பார்; அவரும் நினைப்பார்:எப்படியோ விஷயம் வில்லங்கமின்றி முடிந்தால் நல்லது

இவ்வாறு எண்ணிக் கொண்டே அவள் ஜன்னலோரமாக வந்து நின்றாள். வானத்தில் முளைத்த விடிவெள்ளி, ‘இன்னுமா நீ தூங்கவில்லை?” என்பதுபோல் அவளை எட்டிப் பார்த்தது; சில்லென்றடித்த பனிக்காற்று, எந்த விதமான செலவும் இல்லாமல் உன்னுடைய அறையை நான் ஏர்-கண்டிஷன் செய்து வைத்திருக்கும்போதுக் கூடவா உனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை?” என்பதுபோல் அவளை ஒரு தழுவுத் தழுவித் தன் கை வரிசையைக் காட்டிற்று. கண்ணைக் கிறங்க வைத்த அந்தக் காலை இளங்காற்றிலே, ‘கொஞ்சம் தூங்கித் தான் பார்ப்போமே? என்று அவள் திரும்பினாள். அப்போது ‘களுக்கென்ற சிரிப்பொலி அவள் காதில் விழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள்; யாரையும் காணவில்லை. அக்காதான் சிரித்துவிட்டு ஏதும் அறியாதவள் போல் இருக்கிறாளோ என்னமோ என்று எண்ணி, ‘அக்கா, அக்கா! உன்னைத்தான் அக்கா” என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் குரல் கொடுத்துப் பார்த்தாள்; கர்ர்ர், கர்ர்ர்"