பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 காதலும்கல்யாணமும்

என்ற சத்தத்தைத் தவிர அவளிடமிருந்து வேறு எந்தச் சத்தமும் வரவில்லை. ‘வெறும் மனப் பிரமையோ, என்னமோ என்று அவள் மறுபடியும் திரும்பி, மேலே ஒர் அடி எடுத்து வைத்தாள்; மீண்டும் ‘களுக் கென்றச் சிரிப் பொலி அவள் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து, ‘என்னடி உணவும் செல்லவில்லை, உறக்கமும் கொள்ள வில்லையா?’ என்ற மீனாட்சியம்மாளின் குரலும் கேட்கவே, ‘நீங்கள்தானா! யாரோ, என்னமோ என்று நான் பயந்தேப் போனேன்’ என்று சொல்லிக்கொண்டே அவள் முன்னால் எடுத்து வைத்தக் காலைப் பின்னால் எடுத்து வைத்தாள். தன் அறையின் ஜன்னலுக்குப் பின்னால் நின்று அவளைக் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள், ‘வானத்தில் நிலவைக்கூடக் காணோமேடி, உன்னுடைய முகம் ஏன் இப்படி வாட்டமுற்றிருக்கிறது?’ என்றாள் மேலும் தொடர்ந்து.

‘போங்களம்மா, நீங்கள் ஒண்ணு’ என்று சிணுங்கிக் கொண்டே ஜன்னல் கதவைச் சாத்தினாள் பாமா.

‘திறடி, திற ஆளில்லாமல் கதவைச் சாத்தி என்னப் பிரயோசனம்? திறடி, திற!’ என்றாள் மீனாட்சியம்மாள், அப்போதும் அவளை விடாமல். பாமா திறக்கவில்லை! மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் நாள் இரவு பாமா தூக்கமில்லாமல் தவித்ததைப் பற்றியே அந்த வீட்டில் எல்லோரும் பேசினார்கள். அவர்களுடையப் பேச்சில் தான் மட்டும் கலந்துக் கொள்ளாமல் இருப்பானேன் என்று கலந்துக் கொண்ட சொக்கலிங்கனார், ‘கல்யாணம் ஆகும் வரை அப்படித்தான் இருக்கும்; இல்லையா, பாமா?’ என்று பாமாவையேக் கேட்டு வைத்தார். “அப்படித்தான் இருக்கும், போங்களேன்!’ என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு, அதற்குமேல் அவள் அங்கே இருக்க விரும்பாமல் ஆபீசுக்குப் போய்விட்டாள்!