பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 255

அங்கே... அன்றும் காணவில்லை, மோகனை- இப்போதுதான் அவளையும் அறியாமல் அவள் உள்ளத்தில் கவலைப் படர்ந் தது; அதன் அறிகுறியாக அவள் முகத்திலும் கருமை நிறைந்தது.

என்ன ஆகியிருப்பார், அவர்? இந்த மணி சார் கூடத் தன்னைத் தேடி வந்து ஒன்றும் சொல்லக்காணோமே! நாமா வது அவரைத் தேடிச் சென்று விசாரித்துப் பார்ப்போமா?... இந்த எண்ணத்துடன் அவள் மணியின் அறையை நோக்கிச் சென்றபோது, பரந்தாமனின் அறையிலிருந்து அவன் வெளியே வந்து கொண்டிருந்தான்.

‘உங்களைத்தான், ஒரு நிமிஷம்!’ என்றாள் அவள். ‘என்ன மோகன்தானே? இன்று வரமாட்டான், ஆபீசுக்கு; நான் வரட்டுமா என்றான் அவன், வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாக.

இது என்னவோபோலிருந்தது அவளுக்கு-இன்று ஏன் இவரிடம் இந்த மாறுதல் ? எதற்காக இவர் இன்று இவ்வளவு சீக்கிரம் என்னிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்?. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு; இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக்கொள்ளாமல், “ஏன் என்று தெரிந்துக் கொள்ளக் கூடாதா, நான் என்றாள் அவனைத் தொடர்ந்து.

‘அதை என்னிடமிருந்து தெரிந்துக் கொள்வதைவிட அவனிடமிருந்தேத் தெரிந்துக் கொள்வது நல்லது’

‘அப்படியானால்...?’ அவள் தயங்கினாள்: ‘'என்ன?” என்று அவன் தூண்டினான்.

அவள் தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, ‘அவர் இன்னும் அங்கேயேதான் இருக்கிறாரா?’ என்றாள், அவன் காதோடுக் காதாக.